இந்த மனசு தான் சார் கடவுள்..! படிக்க வைத்த கிராமத்துக்கு மறக்க முடியாத பரிசு கொடுத்த தொழிலதிபர்..!

சீனாவின் புகழ் பெற்ற கோடீஸ்வரர் தனது பட்டப்படிப்புக்கு உதவி செய்த கிராமத்திற்கு மிகப்பெரிய நிதியுதவி அளித்துள்ளார்.
பலர் தங்களை உயர்த்தியவர்களை மறக்கும் இந்த காலக்கட்டத்தில், தன்னால் முடிந்தவற்றை வழங்கி, அவர்களின் அன்பையும் மரியாதையையும் பெறுகிறார்கள். அப்படிப்பட்ட ஒருவர் தான் சீனாவைச் சேர்ந்த புகழ்பெற்ற கோடீஸ்வரரான ரிச்சர்ட் லியு கியாங்டாங்
சவுத் சைனா மார்னிங் போஸ்ட் என்ற செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்திகளின் படி, மிகப்பெரிய அளவில் சொத்து சேர்த்து சந்தோஷமாக வாழ்ந்து வரும் பில்லியனரான ரிச்சர்ட் லியு, தன்னுடைய வளர்ச்சிக்கு காரணமாக ஜியாங்சு மாகாணத்தின் குவாங்மிங் கிராமத்தை ஒருபோதும் மறக்கவில்லை. கோடீஸ்வரர் அந்தஸ்தைப் பெற்ற பிறகும், அவர் தொடர்ந்து கிராமத்திற்குச் சென்று, கிராம மக்களே நெகிழும் வகையில் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். தற்போது 50 வயதாகும் ரிச்சர்ட் லியு சீனாவின் முன்னணி இ காமர்ஸ் நிறுவனமான ஜேடி.காம் நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார். இவர் குவாங்மிங் கிராமத்தில் மிகவும் சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்தார். கடும் நிதிநெருக்கடிக்கு மத்தியில் வளர்ந்த அவர், குவாங்மிங் கிராமப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். அதன் பின்னர் கடந்த 1992 ம் ஆண்டு, சீனாவின் புகழ் பெற்ற ன்மின் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி படிக்க பெய்ஜிங்கிற்குச் சென்றார். ஆனால் அவரால் அங்கு கல்வி கட்டணத்தை செலுத்த முடியவில்லை..
அதற்கு போதிய பணம் அவரிடம் இல்லை.. ஒருகட்டத்தில் படிக்கவே முடியாது என்கிற நிலை வந்த போது, அவரது கிராம மக்கள், தங்கள் ஊர் பையன் நன்றாக படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, ஒன்று சேர்ந்து நிதி திரட்டி, சுமார் 6000 ரூபாயை அவருக்கு வழங்கினார்கள். இதனால் படிப்பை முடித்த ரிச்சர்ட் லியு இப்போது சீனாவின் பெரும் கோடீஸ்வர்களில் ஒருவராக இருக்கிறார்.
வெற்றி பெற்றாலும் பழசை மறக்காத ரிச்சர்ட் லியு, தனது மனைவியுடன் கடந்த 2016ம் ஆண்டு, ஜியாங்சு மாகாணத்தில் உள்ள தனது சொந்த கிராமமான குவாங்மிங் கிராமத்திற்குத் திரும்பினார். அவர் ஒவ்வொரு வயதான கிராமவாசிக்கும் ரூ.1,18,000த்தை தேடி தேடிச் சென்று பரிசளித்தார், மேலும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் உணவு, உடை மற்றும் அத்தியாவசிய வீட்டுப் பொருட்களை வழங்கி கௌரவித்தார்.
மேலும் கிராம பஞ்சாயத்தில் விரிவான தகவல்களைப் பெற்று, 1,400 குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதையும் லியு உறுதி செய்தார். இந்த ஆண்டு, 60 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு கிராமவாசிக்கும் ரூ.1,21,245 பணம் தந்தார். கிராம மக்கள் ஆதரவால் தான் தனது உயர் கல்வி சாத்தியமானது என்று உறுதியாக சொல்லும் ரிச்சர்ட் லியு, பதிலுக்கு செய்யும் நன்றிக்கடனை சீனாவின் பத்திரிக்கைகள் புகழ்ந்து வருகின்றன.