1. Home
  2. தமிழ்நாடு

இந்த மனசுதான் சார் கடவுள்..! இஸ்பேட் ராஜாவும் இதய ராணி நடிகையின் தரமான செயல்..!

1

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் நடிகை திவ்யா துரைசாமி, கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் "சில்ட்ரன் சாரிடபுள் ட்ரஸ்டு" சப்ரைஸ் விசிட் கொடுத்தார். இந்த காப்பகத்தில், பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் கல்வி உள்ளிட்ட தேவைகளுக்காக, 36 பெண் குழந்தைகள் மற்றும் சிறப்பு குழந்தைகள் இந்த காப்பகத்தில் வசித்து வருகின்றனர். இந்த காப்பகத்தில் நடந்த கலை நிகழ்ச்சியில் வளர்ந்து வரும் இளம் நடிகை திவ்யா துரைசாமி கலந்துகொண்டு சினிமா பாடல்களுக்கு உற்சாகமாக நடனமாடி குழந்தைகளை மகிழ்வித்தார். அதைத் தொடர்ந்து பெண் குழந்தைகளுக்கும், சிறப்பு குழந்தைகளுக்கும் பரிசுகளை வழங்கினார்.

அதைத்தொடர்ந்து பேசிய நடிகை திவ்யா துரைசாமி, "பெண் குழந்தைகளுடன் நடனமாடிய மகிழ்ச்சியாக இருந்தது. நமக்கு சிறிதாக தோன்றும் விஷயம், மற்றவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். எனவே, நம்மால் முடிந்த வரை மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். பெண் குழந்தைகள் மற்றும் சிறப்பு குழந்தைகளுடன் முடிந்த அளவு நேரத்தை செலவிட வேண்டும் அவர்களுக்கு நம்மைப் போன்றவர்கள் உதவ வேண்டும் என வலியுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து "சில்ட்ரன் சாரிடபுள் ட்ரஸ்டு" காப்பகத்தை சேர்ந்த பாலசுப்ரமணியம் பேசும்போது, "பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் கல்வி உள்ளிட்டவைகளை பூர்த்தி செய்வற்காக இந்த காப்பகம் இயங்கி வருகிறது. பெண் குழந்தைகளை உற்சாகப்படுத்த இதுபோன்ற நிகழ்சிகளை நடத்தி வருகிறோம். மனிதம் வாழும் உலகில், அனைவரும் அனைவருக்குமான உறவுகள், அனைவரையும் அரவணைக்க வேண்டும். பெண் குழந்தைகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தி, அவர்களை முன்னேற்ற வேண்டும் என பேசினார்.

Trending News

Latest News

You May Like