இது தான் திமுக..! சொல்லாத திட்டங்களும் நிறைவேற்றுவோம் : முதல்வர் ஸ்டாலின்..!

தமிழக நகர்ப்புற வீட்டு வசதி வாரியத்தின் சார்பில், பயனாளிகளுக்கு 712 குடியிருப்புகளை வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மத்திய, தென் சென்னை வளர்ந்ததை போல், வட சென்னை வளர்க்கவும் பல்வேறு திட்டங்களை கொண்டு வரப்பட்டு உள்ளது. இப்பகுதியின் வளர்ச்சிக்காக ரூ.1,000 கோடி அறிவிக்கப்பட்டது. இதனை ரூ.6,400 கோடியாக உயர்த்தப்பட்டு உள்ளது. தேர்தல் வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவோம். ஓட்டுப் போட்டவர்களுக்கு மட்டுமல்லாமல், ஓட்டுப் போடாதவர்களுக்குமான ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சியாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது.
90 சதவீதத்திற்கு மேல் வாக்குறுதிகள் நிறைவேற்றி உள்ளன. தேர்தல் நேரத்தில் சொல்லாத திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு உள்ளன. தேர்தல் நேரத்தில் சொல்லாத புதுமைப்பெண் திட்டத்தை நிறைவேற்றி உள்ளோம். இதனால் பயனடைந்த பெண்கள் என்னை அப்பா என அழைக்கின்றனர். அதேபோல், தேர்தல் நேரத்தில் சொல்லப்படாத காலை உணவுத் திட்டத்தையும் நிறைவேற்றி உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.