"இது கண்டிப்பாக கண்டிக்கதக்க செயல்" தமிழக பாஜக தலைவர் முருகன் ஆவேசம் !

அறவழியில் போராட்டம் நடத்த முயன்ற பாஜக நிர்வாகிகளை காவல்துறை கைது செய்துள்ள செயல் கண்டிக்கதக்கது என தமிழக பாஜக மாநில தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
மருது சகோதரர்கள் குரு பூஜையை முன்னிட்டு சிவகங்கை காளையார் கோவில் செல்ல சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அப்போது, அவரை அக்கட்சியினர் மேலம் தாளம் முழுங்க வரவேற்பு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தின் தெய்வங்களாக மதிக்கப்படும் பெண்களை கொச்சை படுத்தும் வகையில் பேசுபவர்களை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்த வந்த பாஜக நிர்வாகிகளை தமிழக அரசு கைது செய்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது.
திமுக கந்தசஷ்டி கவசத்தை கொச்சை படுத்தியவர்களுக்கும், பெண்களை கொச்சைபடுத்தும் விதத்தில் பேசுவோர்களையும் பாதுகாக்கும் நடைவெடிக்கையை தான் மேற்கொண்டு வருகின்றது.
குறிப்பாக, அவர்களது ஆதரவு பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களே அவர்களுக்கு எதிராக செயல்பட்டாலும் அவர்களை திமுக தலைவர் ஸ்டாலின் பாதுகாத்தே வருகிறார் .
மத்திய அரசை தொடர்ந்து குறை சொல்வதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிறுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.