1. Home
  2. தமிழ்நாடு

இது பலரால் நம்பப்படுகிறது..! இந்த சகுனங்கள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் பண வரவையும் கொண்டு வரும்..!

1

இந்த சகுனங்கள் தோன்றினால் மழை வரும்.

1. தும்பி பறந்தால் தூரத்தில் மழை

2. தட்டான் தாழப் பறந்தால் மழை

3. அந்தி ஈசல் அடை மழை

4. எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறினால் மழை.

5. தவளை கத்தினால் மழை

6. மாடு மயங்கி வானம் பார்த்தால் மழை

7. கொக்கு மேடேறினால் மழை

8. பகற்பொழுதில் சேவல் கூவி வானத்தைப்
பார்த்தால் மழை

9. கழுதை காதை உயர்த்தினால் மழை

10. ஈசல் பறந்தால் மழை

11. புற்றிலே ஈசல் பறந்தாலும், மண்ணிலே கரையான் கூடினாலும் மழை

12. பாம்புகள் மரத்தில் ஏறினாலோ அல்லது
திறந்த வெளியில் புணர்ச்சியில் ஈடுபட்டாலோ மழை

13. பசு மாடுகள் கன்றைத் தேடி வீட்டிற்கு ஓடினால் மழை.

14. பூனைகள் நிலத்தை பிராண்டினால் மழை

15. குழந்தைகள் அணைக்கட்டி விளையாடினால் மழை

16. மலைகள் நீல நிறமாக காட்சியளித்தால் மழை

17. குகைகள் பனிமூட்டத்தால் மறைக்கப்பட்டிருந்தால் மழை

18. ஓணான்கள் வானத்தைப் பார்த்தால், மரத்தில் ஏறி விளையாடினால் மழை

19. பூனை, எலி, பாம்பு முதலிய பிராணிகள் காரணமின்று அங்குமிங்கும் ஓடினால் மழை.

20. மயில்கள் நடனமாடினால் மழை

21. பசுக்கள் சூரியனையும் ,வானத்தையும் பார்த்தால் மழை

22. பச்சோந்திகள் மரத்தின் மீது அமர்ந்து தன் நிறத்தை மாற்றிக்கொண்டால் மழை

23. பசுக்கள் நிழலிடங்களை விட்டு நகர மறுத்தால் மழை

24. நாய்கள் வீட்டிற்கு வெளியே செல்ல மறுத்தால், வானத்தைப் பார்த்து குரைத்தால் மழை

25. சிட்டுக்குருவிகள் மண்ணில் புரண்டு விளையாடினால் மழை

26. மீன்கள் நீரில் துள்ளி விளையாடினால் மழை.

27. பறவைகள், மிருகங்கள் நுனிப்புல் உண்பதைக் கண்டால் மழை.

28. நீரின் சுவை மாறுதல், உப்பு நீர்த்துப் போதல், மோர் புளித்து போதல் நடந்தால் மழை.

29. இரும்பு பொருட்களிலிருந்து மாமிச வாடை வந்தால் மழை

30. சந்திரனை சுற்றி சிவப்பு நிற வளையம் காணப்பட்டால் அல்லது சந்திரனின் நிறம் கோழியின் கண் போன்று காணப்பட்டால் மழை.

31. வட கிழக்கில் மின்னல் தோன்றினால் மழை

32. மேகங்களால் மறைக்கப்பட்ட சந்திரனிலிருந்து பிரதி சந்திரன் தோன்றினால் மழை

33. இரவு நேரங்களில் இடி முழங்கினால், பகல் நேரத்தில் மின்னல் அடித்தால், கிழக்கு திசையிலிருந்து குளிர்ந்த காற்று வீசினால் மழை.

தேங்காய்

நீங்கள் காலையில் கண் விழித்தவுடன் தேங்காயை அல்லது வெள்ளை நிற வாத்தை பார்த்தால் அது சில மூலங்கள் உங்களை தேடி வருகிறது என்பதைக் குறிக்கும் சகுனமாகும்.

வெள்ளை பசு

உங்கள் வீட்டு புல்வெளியில் பசுமாடு மேய்ந்து கொண்டிருப்பதை அடுத்த முறை பார்த்தால் எரிச்சலடையாதீர்கள். அது பண வரவை குறிக்கும் சகுனமாகும்.

தங்கநிற பாம்பு

உங்கள் கனவில் பொன்னிற அல்லது வெள்ளை நிறப் பாம்பைப் பார்த்தால் அது பண வரவைக் குறிக்கும் தெளிவான அறிகுறியாகும்.

சகுனம்

நீங்கள் போகும் வழியில் உங்கள் வாகனத்துக்கு எதிரே குரங்கு, நாய், பாம்பு அல்லது ஏதேனும் பறவை வந்தால், நீங்கள் விரைவில் பணக்காரராகப் போகிறீர்கள் என்பதற்கான சகுனம் அது.

பசுமை

உங்கள் கனவில் பச்சைப்பசேல் என்றிருக்கும் பசுமையான காட்சிகளைக் கண்டால் அது நீங்கள் விரைவில் செல்வந்தராகப் போவதன் அறிகுறியாகும்.

பால் பொருட்கள்

பால், தயிர் போன்ற பால் சம்பந்தமான பொருட்களை அதிகாலையில் கண்டால், அது உங்களிடம் பணம் சேரப் போவதற்கான சகுனமாகும்.

ரம்மியமான இசை

சங்க நாதம், கோவில் மணி, சில காதுக்கினிய பஜனைகள் போன்ற இசையை காலையில் கண்விழிக்கும் போது கேட்டால், அது உங்களுக்கு பண வரவுடன் நல்லதிர்ஷ்டத்தையும் கொண்டு வரப் போகிறது என்பதற்கான சகுனமாகும்.

கரும்பு

நீங்கள் வேலைக்கு போகும் போது அல்லது காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது வழியில் கரும்பைப் பார்த்தால், நீங்கள் விரைவில் பண வரவை பெறப் போகிறீர்கள் என்று அர்த்தம்.

வௌவால் வீட்டுக்குள் நுழைந்தால்

வௌவால்கள் ஏராளமான செல்வத்தின் சின்னம் என்று சீனர்கள் கருதுகின்றனர். அதே சமயம் இந்து சம்பிரதாயப்படி வௌவால் வீட்டுக்குள் நுழைந்தால் துரதிருஷ்டம் என்று நம்பப்படுகிறது. ஆனால் வௌவால் உங்கள் வீட்டுக்குள் கூடு கட்டினால் நீங்கள் விரைவில் செல்வந்தராகப் போகிறீர்கள் என்று அர்த்தம்.

அதிர்ஷ்ட நாளில் பணம்

ஒவ்வொருவருக்கும் ஒரு அதிர்ஷ்ட நாள் இருக்கிறது. அது ஒரு நாளாகவோ ஒரு வாரமாகவோ அல்லது உங்களுக்கு சந்தோஷமான விஷயங்கள் நடந்த ஒரு தருணமாகவோ இருக்கலாம். அது போன்ற ஒரு நாளில் யாராவது உங்களுக்குப் பணம் கொடுத்தால், நீங்கள் வெகு விரைவில் இன்னும் அதிகப் பணத்தை அடையப் போகிறீர்கள் என்று அர்த்தம்.

எரி நட்சத்திரம்

எரி நட்சத்திரம் விழுவதை நீங்கள் பார்த்தால், அந்த நேரத்தில் நீங்கள் வேண்டுவது நடக்கும் என்பது பழமையான நம்பிக்கை- அதுவும் 30 நாட்களுக்குள் நடக்கும். எனவே எரிநட்சத்திரத்தைப் பார்க்கும் போது நீங்கள் எதை விரும்ப வேண்டும் என்பதில் எச்சரிக்கையாக இருங்கள்!

உடைகளை உட்புறமாக திருப்பி மாற்றி அணிந்தால்

நாம் அடிக்கடி ஆடைகளை திருப்பி அணிந்து கொள்வோம். அது சங்கடமாகவும் தொந்தரவாகவும் இருக்கும். ஆனால் அப்படி செய்தால் (தெரியாமல் செய்தால் மட்டுமே) நல்லதிர்ஷ்டமும் ஏராளமான செல்வமும் வரப்போகிறது என்பதற்கான அறிகுறி என்று நம்பப்படுகிறது.

நல்லதிர்ஷ்ட சின்னத்தை பார்த்தல்

நான்கு இலைகளைக் கொண்ட க்ளோவர் தாவரம், குதிரை குளம்பு, அல்லது தங்க நாணயம் போன்ற அதிர்ஷ்ட சின்னங்களை பார்த்தால் அவை லாபத்தையும் அதிர்ஷ்டத்தையும் குறிக்கும். அது போல எதையாவது நீங்கள் பார்த்தால் அதை பயன்படுத்த வேண்டாம். அதை லாக்கரில் பத்திரப்படுத்துங்கள். அதன் பலன்களை நீங்கள் விரைவில் பார்க்கலாம்.

நாய் உங்கள் வீட்டில் தங்க வந்தால்

நாய்க்குட்டி புகலிடம் தேடி உங்கள் வீட்டில் தங்கிக் கொள்ள வந்தால், அது அன்பு, மகிழ்ச்சி மற்றும் நல்லதிர்ஷ்டம் வரப்போவதற்கான சகுனமாகும். நாய்கள் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் சின்னமாகும்.

தோட்டத்து உயிரினங்கள்

மழை ஓய்ந்த பிறகு வெட்டுக்கிளியோ தவளையே உங்கள் வீட்டுக்குள் வந்தால், அதை விரட்டி அடிக்காதீர்கள். இந்த உயிரினங்கள் அதிர்ஷ்டம் வருவதை முன்கூட்டி அறிவிக்கும் முன்னோடிகளாவர். எனவே நீங்கள் விரைவில் அதிர்ஷ்டத்தை அடையப் போகிறீர்கள் என்று அர்த்தம்.

Trending News

Latest News

You May Like