இது எனக்கு ஏற்பட்ட அவமானம் - மம்தா பானர்ஜி..!
இன்று பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் அமைப்பின் 9 வது கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பா.ஜ., மற்றும் அக்கட்சி கூட்டணி ஆளும் மாநில முதல்வர்கள் கலந்து கொண்ட நிலையில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் 8 பேர் புறக்கணித்தனர். அதன்படி தமிழக முதல்வர் முக ஸ்டாலின், கா்நாடக முதல்வர் சித்தராமையா, இமாச்சல பிரதேச முதல்வர் சுக்வீந்தர் சிங், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கேரளா முதல்வர் பினராயி விஜயன், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்டவர்கள் புறக்கணிப்பதாக அறிவித்தனர்.
மம்தா பானர்ஜி மட்டும் கலந்து கொண்டார். முன்னதாக அவர், கூட்டத்தில் தன்னை பேச அனுமதிக்கவில்லை எனில் கூட்டத்தை புறக்கணிப்பேன் எனக்கூறியிருந்தார். அதன்படி, இன்று டில்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டம் கூடியது. சிறிது நேரத்தில் அவர் வெளிநடப்பு செய்தார்.
இந்நிலையில், நிருபர்களிடம் மம்தா கூறியதாவது: நிதி ஆயோக் கூட்டத்தில் மற்ற மாநில முதலமைச்சர்களுக்கு அதிக நேரம் ஒதுக்கப்பட்டது ஆனால் எனக்கு 5 நிமிடம் மட்டுமே பேச அனுமதி தரப்பட்டது. அதன்பிறகு கூடுதல் நேரம் கேட்ட நிலையில் அவரது மைக் ஆப் செய்யப்பட்டது.இந்த கூட்டத்தில் பாஜகவின் முதல்வர்கள், பாஜக கூட்டணியில் உள்ள முதல்வர்களுக்கு 10 முதல் 20 நிமிடம் வரை பேச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது எனக்கு ஏற்பட்ட அவமானம் எனவே நான் நிதி ஆயோக் கூட்டத்திலிருந்து வெளியேறினேன் என பேசியுள்ளார்.