1. Home
  2. தமிழ்நாடு

இது தான் நடிகர் சேஷுவின் நீண்ட நாள் ஆசையாம்..!

1

விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை தனது பாடி லேங்குவேஜ், ஃபேஸ் எக்ஸ்பிரஷன்கள் மூலம் சிரிக்க வைத்து வந்தவர்  நடிகர் சேஷு. தொடர்ந்து அவர் சந்தானம், யோகிபாபு உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அண்மையில் வெளியான ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.

கடந்த 15-ம் தேதி மாரடைப்பு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேஷு அனுமதிக்கப்பட்டார். அவரது இதயத்தில் அடைப்பு இருப்பதாக கூறப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களாக வென்டிலேட்டர் உதவியுடன் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி காலமானார்.

சேஷுவின் கடைசி ஆசையே, உலகநாயகன் கமல்ஹாசன் உடன் ஒரு காட்சியிலாவது சேர்ந்து நடித்துவிட வேண்டும் என்பது தானாம். இதை அவரே பல பேட்டிகளில் சொல்லி இருக்கிறதார். சினிமாவில் சாதிக்க வேண்டும் என்கிற கனவோடு இருந்த சேஷுவின் நீண்ட நாள் ஆசை நிறைவேறாமலே இந்த உலகத்தைவிட்டு பிரிந்துவிட்டார் என்று சேஷுவின் நண்பர்கள் கண்ணீர் மல்க கூறிவருகின்றனர். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like