1. Home
  2. தமிழ்நாடு

இது டி-20 போட்டியா இல்ல டெஸ்ட் போட்டியா.. கடுப்பான ரசிகர்கள்.. ஏன் தெரியுமா ?

இது டி-20 போட்டியா இல்ல டெஸ்ட் போட்டியா.. கடுப்பான ரசிகர்கள்.. ஏன் தெரியுமா ?


டி-20 கிரிக்கெட் போட்டி என்றாலே பரபரப்புக்கும், அதிரடிக்கும் பஞ்சம் இருக்காது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் டி-20 போட்டிகளை எதிர்பார்த்து இருப்பர். அதிலும் குறிப்பாக ஐபிஎல் போன்ற தொடர்களை விடவே மாட்டார்கள்.

ஆனால், நேற்று நடந்த ஐபிஎல் போட்டி ரசிகர்களை கடுப்பாக்கியுள்ளது. கொல்கத்தா - ஹைதரபாத் அணிகள் இடையேயான போட்டி தான் இதற்கு காரணம்.

தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.

இதில் கொல்கத்தா அணி வெற்றிபெற்றது என்பது வேறுகதை. முதலில் பேட்டிங் செய்ய களமிங்கிய ஹைதிராபாத் அணிக்கு ஜானி பாரிஸ்டோவும், டேவிட் வார்னரும் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.

இது டி-20 போட்டியா இல்ல டெஸ்ட் போட்டியா.. கடுப்பான ரசிகர்கள்.. ஏன் தெரியுமா ?

இதில் பாரிஸ்டோ 5 ரன்களில் விக்கெட்டை இழந்தாலும் மற்றொரு துவக்க வீரரான டேவிட் வார்னர் நீண்ட நேரம் நிலைத்து நின்று விளையாடினார்.

அடித்து விளையாட திணறிய டேவிட் வார்னர் 36 ரன்களிலும், மணிஷ் பாண்டே 51 ரன்களிலும் விக்கெட்டை இழந்து வெளியேறினர்.

இந்தநிலையில், இந்த போட்டி டி-20 என்பதை மறந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது போல் 31 பந்துகளில் 30 ரன்கள் எடுத்ததாக ஹைதராபாத் அணியின் விக்கெட் கீப்பர் விர்திமான் சஹாவை சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.

அதேபோல் கொல்கத்தா அணியும் பெரியளவில் அதிரடி காட்டவில்லை என்பதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like