தீபாவளி போனஸா இது.. இன்ப அதிர்ச்சி கொடுத்த உரிமையாளர்..!

நம்மில் பலர் தீபாவளிக்கு எவ்வளவு போனஸ் கிடைக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்போம்.
இந்நிலையில் ஊட்டி டீ எஸ்டேட் உரிமையாளர் அவருடைய 15 ஊழியர்களுக்கு கொடுத்த தீபாவளி பரிசு தான் இன்றைய மக்களின் ஹாட் டாபிக்.. அப்படி என கொடுத்தார் நீங்களே பாருங்க
தீபாவளி போனஸ் என்பது சில நிறுவனங்களில் இரண்டு மாத சம்பளம் தருவார்கள், சில நிறுவனங்களில் ஒரு மாத சம்பளம் தருவார்கள், சில நிறுவனங்களில் கருணை தொகையாக சில ஆயிரங்கள் மட்டுமே கிடைக்கும்.. சில நிறுவனங்கள் தீபாவளி பரிசாக கார் கூட வழங்கி உள்ளார்கள். சில நிறுவனங்கள் நிறைய பரிசுகளை தருகின்றன. இந்நிலையில் நீலகிரியில் செயல்பட்டு வரும் தனியார் டீ எஸ்டேட்டில் ஊழியர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, சிறப்பாக செயல்பட்ட 15 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு அவர்கள் விரும்பும் இருசக்கர வாகனங்கள், உரிமையாளர் சிவகுமாரால் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. தனது உரிமையாளர் கொடுத்த இன்ப அதிர்ச்சியால் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்ற ஊழியர்கள், புன்முறுவல் மற்றும் இன்முகத்துடன் தங்களின் பரிசை பெற்றுக்கொண்டனர்.
#Watch | தனது டீ எஸ்டேட்டில் பணியாற்றும்15 ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக அவரவர் விரும்பும் வாகனங்களை வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்த உரிமையாளர் சிவக்குமார்!#SunNews | #Nilgiris | #DeepavaliBonus | #Bike pic.twitter.com/4xgMMgilp5
— Sun News (@sunnewstamil) November 1, 2023