இது செம காம்போ ஆச்சே..! சூர்யா 45 படத்தை இயக்கும் ஆர்.ஜே.பாலாஜி..!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் `கங்குவா' திரைப்படம் அடுத்த மாதம் 14-ம் தேதி வெளியாகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 44-வது திரைப்படத்தின் படப்பிடிப்பும் கடந்த வாரம் நிறைவு பெற்றது. அதை தொடர்ந்து வெற்றி மாறன் இயக்கத்தில் `வாடிவாசல்' திரைப்படமும் அவருடைய லைன் அப்பில் இருக்கிறது.
இந்நிலையில் ஆர்.ஜே. பாலாஜி சூர்யாவை வைத்து அடுத்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இத்திரைப்படம் குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி, " இத்திரைப்படம் பிளாக்பஸ்டர் என்டர்டெயினராக இருக்கும்!" எனப் பதிவிட்டிருக்கிறார்.
#Suriya45 🖤
— RJ Balaji (@RJ_Balaji) October 14, 2024
We promise you all a BLOCKBUSTER entertainer🔥@Suriya_offl ❤️@arrahman 🐐@DreamWarriorpic 🎬@prabhu_sr 🤝 pic.twitter.com/xKCSIIpS8t
#Suriya45 🖤
— RJ Balaji (@RJ_Balaji) October 14, 2024
We promise you all a BLOCKBUSTER entertainer🔥@Suriya_offl ❤️@arrahman 🐐@DreamWarriorpic 🎬@prabhu_sr 🤝 pic.twitter.com/xKCSIIpS8t