ஊரடங்கிலும் இந்த தொழிலுக்கு மட்டும் மவுசு குறையவில்லை.. கல்லா கட்டும் புரோக்கர்கள் !
வட இந்தியாவில் தான் கடந்த காலங்களில் பாலியல் தொழில்கள் அதிகளவில் நடப்பதாக புகார்கள் கூறப்படுவது உண்டு. ஆனால் இப்போது தென் இந்தியாவிலும் அத்தொழில் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பாலியல் தொழில்கள் நடத்தும் பெண்கள், ஆண்கள் கைது செய்யப்படுகின்றனர். புரோக்கர்கள், இளம்பெண்கள் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது.
தற்போது கொரோனா காலத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக அனைத்து தொழில்களும் முடங்கின. ஆனால் பாலியல் தொழில் மட்டும் குறையவில்லை, பழைய வேகத்தில் நடந்ததாக போலீசார் கூறுகின்றனர்.
இதனால் புரோக்கர்கள் சுறுசுறுப்பாக இயங்கி அதிகளவில் பண வேட்டையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் இளம் அழகிகள் கிடைக்காத சூழலில் வடமாநிலங்களில் இருந்தும் பெண்களை இறக்குமதி செய்கின்றனர் புரோக்கர்கள்.
இ பாஸ் அமலில் இருக்கும்போது அழக்கிகளை பைக்கில் ஏற்றிக்கொண்டு மாவட்ட எல்லைகளில் கொண்டுவிட்டு, மாவட்ட மாவட்டமாக அழைத்துச்சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும் தெரிய வந்தது.
மேலும் கொரோனா காலத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில், தஞ்சாவூர், கோவை, திருச்சி போன்ற நகரங்களில் பாலியல் தொழில் அமோகமாக நடைபெற்றது.
சென்னையில் சொல்லவே வேண்டாம். நாள்தோறும் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள், புரோக்கர்கள் கைது என்ற செய்தி வெளியாகி வருகின்றனர்.
மேலும் பல இடங்களில் மசாஜ் சென்டர் நடத்துவது போன்று அதில் பாலியல் தொழில் நடத்துவதும் அதிகரித்து வருகிறது. அண்மையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு பணத்தை பிரிக்கும் போது ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவமும் அரங்கேறியது.
எனவே தமிழகத்தில் பாலியல் தொழிலை கட்டுப்படுத்த வேண்டும். அதில் இளம்பெண்களை ஈடுபடுத்தி சீரழிக்கும் புரோக்கர்கள் உள்ளிட்டோரை கைது செய்து கடும் தண்டனை கொடுக்க குரல் ஓங்கியுள்ளது.
newstm.in