1. Home
  2. தமிழ்நாடு

யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது - த.வெ.க., தலைவர் விஜய்..!

1

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் பாலாஜி என்ற டாக்டரை, விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்தினார். அவரை கைது செய்த போலீசார் ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இச்சம்பவத்திற்கு முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.


இந்நிலையில், த.வெ.க., தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது என்பது தினம் தினம் நிகழும் குற்றச் செயல்களால் நிரூபணமாகிறது.

சென்னை கிண்டியில் உள்ள உயர் சிறப்பு அரசு மருத்துவமனையில், புற்றுநோய் டாக்டர் பாலாஜி இன்று கத்தியால் குத்தப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில், அரசு டாக்டரின் உயிருக்கே பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டு இருப்பதற்குத் தமிழக அரசின் மெத்தனப் போக்கே காரணம்.


கத்திக் குத்தில் படுகாயம் அடைந்த டாக்டர் பாலாஜி, விரைவில் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன். காலம் நேரம் பார்க்காது கடுமையாக உழைக்கும் டாக்டர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும்.


தமிழகத்தில் தினந்தோறும் நிகழும் பல்வேறு குற்ற நிகழ்வுகள், பொதுமக்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளன. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய ஆட்சியாளர்கள் இனியாவது விழித்துக்கொண்டு மக்களைப் பாதுகாக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய் கூறியுள்ளார்.



 

Trending News

Latest News

You May Like