1. Home
  2. தமிழ்நாடு

இந்த முடிவு எனக்கு கண்ணீரை வரவைத்தது - எமோஷனலாக பேசிய வெங்கடேஷ் ஐயர்..!

1

2025 ஆண்டு மார்ச் மாத இறுதியில் ஐபிஎல் 18-வது சீசன் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக டிசம்பரில் மெகா ஐபிஎல் ஏலம் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் ஏலத்துக்கு முன்பாக அந்தந்த அணிகள் 6 வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்ட நிலையில், கடந்த அக்டோபர் 31-ம் தேதியன்று அனைத்து அணிகளும் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டன.

ஒவ்வொரு அணியின் தக்கவைத்த வீரர்கள் பட்டியலின் படி,

CSK - 5 வீரர்கள்

  • ருதுராஜ் கெய்க்வாட் - ரூ.18 கோடி

  • ரவீந்திர ஜடேஜா - ரூ.18 கோடி

  • மதீஷா பத்திரனா - ரூ. 13 கோடி

  • ஷிவம் துபே - ரூ. 12 கோடி

  • MS தோனி - ரூ. 4 கோடி

MI - 5 வீரர்கள்

  • ஜஸ்பிரித் பும்ரா - ரூ.18 கோடி

  • சூர்யகுமார் யாதவ் - ரூ.16.35 கோடி

  • ஹர்திக் பாண்டியா - ரூ.16.35 கோடி

  • ரோகித் சர்மா - ரூ.16.30 கோடி

  • திலக் வர்மா - ரூ.8 கோடி

RCB - 3 வீரர்கள்

  • விராட் கோலி - ரூ.21 கோடி

  • ரஜத் படிதார் - ரூ.11 கோடி

  • யாஷ் தயாள் - ரூ.5 கோடி

KKR - 6 வீரர்கள்

  • ரிங்கு சிங் - ரூ.13 கோடி

  • வருண் சக்ரவர்த்தி - ரூ.12 கோடி

  • சுனில் நரைன் - ரூ.12 கோடி

  • ஆண்ட்ரே ரசல் - ரூ.12 கோடி

  • ஹர்ஷித் ராணா - ரூ.4 கோடி

  • ரமன்தீப் சிங் - ரூ.4 கோடி

RR - 6 வீரர்கள்

  • சஞ்சு சாம்சன் - ரூ.18 கோடி

  • யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ரூ.18 கோடி

  • ரியான் பராக் - ரூ.14 கோடி

  • துருவ் ஜுரேல் - ரூ.14 கோடி

  • ஷிம்ரன் ஹெட்மயர் - ரூ.11 கோடி

  • சந்தீப் சர்மா - ரூ.4 கோடி

SRH - 5 வீரர்கள்

  • ஹென்ரிச் கிளாசென் - ரூ.23 கோடி

  • பாட் கம்மின்ஸ் - ரூ.18 கோடி

  • அபிஷேக் சர்மா - ரூ.14 கோடி

  • டிராவிஸ் ஹெட் - ரூ.14 கோடி

  • நிதிஷ் குமார் ரெட்டி - ரூ.6 கோடி

GT - 5 வீரர்கள்

  • ரஷித் கான் - ரூ.18 கோடி

  • சுப்மன் கில் - ரூ.16.50 கோடி

  • சாய் சுதர்சன் - ரூ.8.50 கோடி

  • ராகுல் தெவாடியா - ரூ.4 கோடி

  • ஷாருக் கான் - ரூ.4 கோடி

DC - 4 வீரர்கள்

  • அக்சர் படேல் - ரூ.16.50 கோடி

  • குல்தீப் யாதவ் - ரூ.13.25 கோடி

  • டிரிஸ்டன் ஸ்டப்ஸ் - ரூ.10 கோடி

  • அபிஷேக் போரல் - ரூ. 4 கோடி

LSG - 5 வீரர்கள்

  • நிக்கோலஸ் பூரன் - ரூ.21 கோடி

  • ரவி பிஷ்னோய் - ரூ.11 கோடி

  • மயங்க் யாதவ் - ரூ.11 கோடி

  • மொசின் கான் - ரூ.4 கோடி

  • ஆயுஷ் பதோனி - ரூ.4 கோடி

PBKS - 2 வீரர்கள்

  • ஷஷாங்க் சிங் - ரூ.5.5 கோடி

  • பிரப்சிம்ரன் சிங் - ரூ.4 கோடி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பொறுத்தவரையில், ரிங்கு சிங், வருண் சக்ரவர்த்தி, சுனில் நரைன், ஆண்ட்ரே ரசல், ஹர்ஷித் ராணா, ரமன்தீப் சிங் முதலிய 6 வீரர்களை தங்களுடைய அணியில் தக்கவைத்துள்ளது. ஆனால் கோப்பை வென்று கொடுத்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் 2024 ஐபிஎல்லில் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டியில் அரைசதமடித்து அணியை கோப்பைக்கு அழைத்துச்சென்ற வெங்கடேஷ் ஐயர் முதலிய முக்கியமான வீரர்கள் அந்த அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கேகேஆர் அணி தன்னை வைக்காதது குறித்து ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர் மனமுடைந்து பேசியுள்ளார்.

“KKR அணியை பொறுத்தவரை, இது ஒரு முழுமையான குடும்பம். இங்கு இருக்கும் 20 அல்லது 25 வீரர்கள் மட்டுமல்ல, நிர்வாகம், ஊழியர்கள், திரைக்குப் பின்னால் உள்ள தோழர்கள் என அனைவரும் ஒரு குடும்பமாகவே இருக்கின்றனர். இதற்குப் பின்னால் எனக்கு நிறைய நல்ல உணர்வுகள் உள்ளன, என் பெயர் தக்கவைப்பு பட்டியலில் இல்லை என்றபோது அது எனக்கு கண்ணீரை வரவைத்தது” என்று எமோஷனலாக பேசியுள்ளார்.

மேலும் தனக்கு ஒரு திருப்பு முனை ஏற்படுத்தியது கேகேஆர் என தெரிவித்திருக்கும் அவர், “எனது முதல் ஏலத்தில் KKR என்னை ஏலம் எடுத்த வீடியோ இல்லாததால், இந்த ஏலத்தின் போது KKR எனக்காக செல்கிறதா என்பதைப் பார்க்க நான் ஒரு குழந்தையைப் போல உட்கார்ந்திருப்பேன், அவர்கள் அதை செய்தால், அதைவிட எனக்கு உலகில் சிறந்தது இல்லை. நான் அவர்களின் தக்கவைப்பு பட்டியலில் இருக்க விரும்புகிறேன், KKR எனக்கு பெரிய திருப்புமுனையை கொடுத்துள்ளது, அவர்களுக்காக என்னுடைய எல்லாவற்றையும் கொடுத்துள்ளேன்” என்று கேகேஆர் உடனான நெருக்கம் குறித்து பேசினார்.


 


 

Trending News

Latest News

You May Like