இந்த காம்பினேஷன் தாய்லாந்தில் பிரபலமாம்..! "பானிபூரி + வறுத்த சிவப்பு எறும்புகள்"
தாய்லாந்தைச் சேர்ந்த சமையல் கலைஞர்கள் இந்திய தயாரிப்பான பானி பூரியை தங்கள் பாரம்பரியத்துடன் கலந்து புதுமைப்படுத்த திட்டமிட்டுள்ளனர். இந்த நோக்கத்திற்காக, பானிபூரி கலவையுடன் கூடுதலாக வறுத்த சிவப்பு எறும்புகள் மற்றும் பூரியின் மேல் அலங்கரிக்கப்படுகின்றன.
சிவப்பு எறும்புகள் சத்தீஸ்கரில் இருந்து கொண்டு வரப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இதற்கு இந்திய பானி பூரி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இந்த பானி பூரிக்கு தாய்லாந்து உணவு பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சத்தீஸ்கரில் பழங்குடியினரின் உணவுப் பழக்கங்களில் சிவப்பு எறும்புகளின் குறிப்பிடத்தக்க பயன்பாடு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.