1. Home
  2. தமிழ்நாடு

கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த அட்வைஸ் !! நுரையீரலில் உள்ள கிருமிகளை சுத்தம் செய்ய !! இதை செய்யுங்க..

கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த அட்வைஸ் !! நுரையீரலில் உள்ள கிருமிகளை சுத்தம் செய்ய !! இதை செய்யுங்க..


இது குறித்து டாக்டர் தீபா கூறுகையில் ; இதற்கு நாடி சுத்தி பிராணயாமம் என்ற பெயரும் உண்டு. சுத்தி என்றால் சுத்தப்படுத்துதல். நம் உடலில் உள்ள நாடிகளை 3 ஆக பிரிக்கிறோம். இட நாடி, பிங்கல நாடி, சூஷ்மன நாடி ஆகியவை ஆகும். மூச்சு விடும் போது வயிறு வெளியே வரக் கூடாது அந்த பழக்கமே தவறு.

இட நாடி என்றால் இடதுப் புறத்தில் உள்ள நாடி. பிங்கல நாடி என்பது வலது புறத்தில் உள்ள நாடி. நாம் காலையில் எழுந்தவுடன் சுறுசுறுப்பாக இயங்க இந்த பிங்கல நாடி தான் காரணமாக இருக்கிறது. பாசிட்டிவாக சிந்திப்பதற்கும், நமது செயல்பாட்டை தெளிவுப்படுத்துவதற்கும் பிங்கல நாடி உதவியாக இருக்கும்.

கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த அட்வைஸ் !! நுரையீரலில் உள்ள கிருமிகளை சுத்தம் செய்ய !! இதை செய்யுங்க..

இட நாடி என்பது ரெஸ்ட் அன்ட் ரிலாக்ஸேஷன். ஓய்வு எடுக்கக் கூடிய விஷயங்களை இடது நாடி நமக்கு பேலன்ஸ் செய்கிறது. இந்த இரு நாடிகளும் சமநிலையில் இருக்கும் போதுதான் சூஷ்மன நாடி தூண்டப்படுகிறது.

இந்த நாடிகளை சுத்தம் செய்வதுதான் நாடி சுத்தி பிரணாயாமம். இந்த நாடி சுத்தி பிராணயாமம், நமது காற்றை சுத்தம் செய்து சுத்தமான ஆக்ஸிஜனை கொடுக்கிறது. அது மட்டுமில்லாமல் இது ஒரு பெரிய வலி நிவாரணியும் ஆகும். கொரோனா நேரத்தில் நிறைய பேருக்கு உடல் வலி அதிகமாக இருக்கும்.

அசதியாக இருப்பார்கள், அதிகமான தலைவலி ஏற்படும். இந்த நாடி சுத்தி பிராணயாமம் செய்யும் போது நாடிகளும் சுத்தமாகிறது. நமது இடது மற்றும் வலது மூளைகளை சமமான செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு இந்த பிராணயாமம் உதவுகிறது.

இந்த பிராணயாமத்தை ஒரு நாளைக்கு 5 முதல் 10 முறை செய்யலாம். இதனால் நமது உடலுக்கு ஒரு நல்ல ஆக்ஸிஜனேஷன் கிடைக்கிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகிறது. இதனால் மனமும் அமைதியாகிறது.

இதை காலை மற்றும் மாலை நேரத்தில் வெறும் வயிற்றில் இருக்கும் போது நல்ல சவுகரியமாக உட்கார்ந்து கொண்டு நாசிக முத்திரையை பயன்படுத்தி இடது நாசி வழியாக மூச்சை இழுத்து வலது புறத்தில் விடுவது , வலது புறத்தில் மூச்சை இழுத்து இடது புறத்தில் விடுவது என நாம் தினசரி செய்வதன் மூலம் நமது ஆரோக்கியம் மேன்மைப்படும் என்றார் டாக்டர் தீபா.

Newstm.,in

Trending News

Latest News

You May Like