1. Home
  2. தமிழ்நாடு

இந்த செயல் உங்களை ஒரு தாழ்வு மனப்பான்மை கொண்ட நபராக அது காட்டுகிறது : அண்ணாமலையை சீண்டிய காயத்ரி ரகுராம்..!

1

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, 2002 ஆம் ஆண்டு இரண்டு தகரப்பெட்டியுடன் தனது அப்பா வேட்டிக் கட்டிக்கொண்டு கோயம்புத்தூருக்கு வந்ததாகவும், அப்போது சிங்கை ராமச்சந்திரனின் அப்பா எம்எல்ஏவாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

சிங்கை ராமச்சந்திரன் எம்எல்ஏ கோட்டாவில் படித்தவர் என்றும் தான் முதன் முதலில் கோவைக்கு வந்தபோது எதுவும் இல்லாமல் வந்ததாகவும் தெரிவித்தார். அவரது பேச்சுக்கு அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுக மகளிரணி துணை செயலாளரான காயத்ரி ரகுராம் தனது சமூக வலைதள பக்கத்தில் அண்ணாமலைக்கு ஒருமையில் பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், 'சிங்கை ராமச்சந்திரனின் வாழ்க்கை உன் வாழ்க்கையை விட கடினமானது அண்ணாமலை. அவர் இந்த நிலைக்கு சுயமாக உருவாக்கப்பட்ட நபர். அவருக்கு 11 வயதாக இருந்தபோது அவரது தந்தை இறந்தார். அப்பா இல்லாமல் வளர்ந்த வலி உனக்கு தெரியுமா? குறைந்த பட்சம் இரண்டு தகர டப்பாவை எடுத்துச் செல்ல உங்களுக்கு அப்பா இருந்தார். மகிழ்ச்சியாக இரு.

சிங்கை ராமச்சந்திரனின் தந்தை எம்.எல்.ஏ., ஆவதற்கு கடுமையாக உழைத்தார், மக்களுக்கு சேவை செய்வதே அவரது லட்சியம் மற்றும் எம்.ஜி.ஆரின் விசுவாசி. உங்கள் தந்தைக்கும் எம்எல்ஏ ஆவதற்கு முயற்சி செய்திருக்கலாம், ஆனால் அவர் ஒரு விவசாயியாக இருக்கத் தேர்ந்தெடுத்தார். அது உங்கள் தந்தையை ஏழையாகவோ அல்லது குறைந்த மனிதனாகவோ மாற்றாது.

உங்கள் அப்பாவைப் பற்றியும் பெருமைப்படுங்கள். ஒப்பிட்டு உங்கள் தந்தையை சிறுமைப்படுத்துகிறீர்கள். பெற்றோரை ஒப்பிடாதீர்கள் உங்கள் நிலையை ஒப்பிடாதீர்கள் மற்றவர்களின் வாழ்க்கையை ஒப்பிடாதீர்கள், தவறான காரணத்திற்காக யாரையும் ஒப்பிடாதீர்கள். அது உங்களை ஒரு தாழ்வு மனப்பான்மை கொண்ட நபராக அது காட்டுகிறது'. என தெரிவித்துள்ளார்.


 


 

Trending News

Latest News

You May Like