1. Home
  2. தமிழ்நாடு

திருவண்ணாமலை சோகம்..! மண் சரிவில் சிக்கிய 7 பேரில் 5 பேரின் சடலங்கள் மீட்பு..!

1

பெஞ்சல் புயல் தாக்கத்தினால் திருவண்ணாமலையில் பெய்த கனமழையில் அண்ணாமலையார் மலையில் மண் மற்றும் பாறை சரிவு ஏற்பட்டது. இதில் வ.உ.சி. நகரில் 40 டன் எடை கொண்ட பாறை உருண்டு 2 வீடுகள் சேதம் அடைந்தன. பாறை உருண்டு விழுந்ததால் வீடு ஒன்று புதையுண்டது. அந்த வீட்டில் இருந்த ராஜ்குமார், மீனா தம்பதி, அவர்களின் குழந்தைகள் கவுதம், இனியா, பக்கத்து வீட்டு சிறுவர்கள் மகா, வினோதினி, ரம்யா என 7 பேர் சிக்கிக் கொண்டனர்.
 

இந்நிலையில் சம்பவ பகுதியில் மீட்பு பணிகளை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டார். அவர் கூறுகையில், ''திருவண்ணாமலையில் இதுபோன்ற மண்சரிவு என்ற நிகழ்வு ஏற்பட்டதே இல்லை. இம்முறை அதிக மழை பெய்ததால் மண்சரிந்துள்ளது. பாறாங்கற்கள் உருண்டதில், மலையின் கீழே இருந்த 2 வீடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன. ''அதில் ஒரு வீட்டில் இருந்த அனைவரும் வெளியேறி விட்டனர். மற்றொரு வீட்டில் உள்ள 7 பேரும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டுள்ள நிலை ஏற்பட்டது,'' என்றார்.
 

இதனிடையே, மழை குறுக்கிட்டபோதிலும் 12 மணிநேரத்தை கடந்து நடைபெற்ற மீட்பு பணிகளில் 5 பேரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. எஞ்சியவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடக்கிறது.ஒரே குடும்பத்தை சேர்ந்த, குழந்தைகள் உள்ளிட்டோர் மண்ணில் புதையுண்டு உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like