1. Home
  2. தமிழ்நாடு

திருவள்ளுவருக்கு காவி உடை..! மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஆளுநர் மாளிகை...!

1

ஆளுநர் மாளிகையில் இன்று நவம்பர் 16ம் தேதி சனிக்கிழமை சர்வதேச கருத்தரங்கு ஒன்று நடைபெற உள்ளது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார்.  திருவள்ளுவர், கவிஞர் கபீர் தாஸ், யோகி வேமனா ஆகியோர் பற்றி இந்த கருத்தரங்கில் பலர் உரையாற்ற உள்ளனர்.
இந்நிகழ்வுக்கான அழைப்பிதழிலில் தான், சர்ச்சை தொடங்கியுள்ளது. இந்த  அழைப்பிதழில் திருவள்ளுவருக்கு முனிவர் போன்று காவி உடை உள்ளது. இது குறித்து  பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

வள்ளுவருக்கு காவி உடை அணிவித்து அவரை மத அடையாளமாக மாற்றிக்காட்டும் பணியை  ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து செய்து வருகிறார்.  இந்துத்துவா அரசியலை பிரச்சாரப்படுத்தும் பணியில் ஆளுநர் மாளிகை தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக மதுரை எம்பி சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் “தமிழக ஆளுநர் ரவி தனது பதவியை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் கலகத்தை உருவாக்க வேண்டும் என இதனை தெரிந்தே செய்து வருகிறார்.

இதன் மூலம் தமிழ்நாட்டில்  ஓர் பதட்டமான சூழலை உருவாக்க வேண்டும் என்று தான் மீண்டும் மீண்டும் என்று செய்து வருகிறார்.  திருவள்ளுவரை ஒரு மதத்திற்குள் அடைக்க முயற்சி செய்து வருகிறார். இது தவறான முயற்சி. ஆளுநரின் முயற்சி ஒரு போதும் பலிக்காது. வெற்றி பெறாது” என  தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் ஆளுநர் மாளிகையில் நடந்த திருவள்ளுவர் தின விழாவில் திருவள்ளுவர் புகைப்படத்திற்கு காவி உடை அணிவிக்கப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.   திருவள்ளுவர் தின அழைப்பிதழிலும் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like