1. Home
  2. தமிழ்நாடு

மீண்டும் காவி உடையில் திருவள்ளுவர்... தி.மு.க போஸ்டரால் பரபரப்பு..!!

மீண்டும் காவி உடையில் திருவள்ளுவர்... தி.மு.க போஸ்டரால் பரபரப்பு..!!


திருவள்ளுவர் தினத்தை ஒட்டி, திருநெல்வேலி மாவட்ட திமுகவினரால் போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில், காவி உடையில் கழுத்தில் ருத்திராட்ச மாலை, நெற்றியில் திருநீறு பட்டை, குங்கும பொட்டுடன் கூடிய திருவள்ளுவர் படம் இடம் பெற்றுள்ளது. அத்துடன் முதல்வர் ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி படமும் இடம் பெற்றுள்ளன.

கடந்த 2020ம் ஆண்டு திருவள்ளுவர் தினத்தை ஒட்டி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனது சமூக வலைதளப் பக்கத்தில் காவி உடை அணிந்த திருவள்ளுவர் படத்தை பதிவிட்டார். அதற்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியதும், அப்படத்தை நீக்கி விட்டு வெள்ளை நிற உடையணிந்த திருவள்ளுவர் படத்தை பதிவிட்டார்.

அதேபோல, கோவையில் உள்ள வேளாண்மை பல்கலைக்கழக நூலகத்தில், அதிமுக ஆட்சியில் காவி உடை அணிந்த திருவள்ளுவர் படம் பொருத்தப்பட்டது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின், கடந்த ஜூன் மாதம் அப்படத்தை அகற்ற உத்தரவிடப்பட்டது.

தற்போது, திருநெல்வேலி மாவட்ட திமுகவினர் காவி உடை அணிந்த திருவள்ளுவர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இதற்கு, தமிழக பாஜகவினர் மத்தியில் வரவேற்பும், திமுகவினரிடம் சலசலப்பு உருவாகி உள்ளது.

Trending News

Latest News

You May Like