திருவள்ளுர் அருகே பயங்கரம் : தலைத் துண்டிக்கப்பட்டு சாலையில் கிடந்த இளைஞரின் சடலம்!
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பழவேற்காடு சாலையில் கைகள் பின்புறம் கட்டப்பட்ட நிலையில், தலைத் துண்டிக்கப்பட்டு, இளைஞர் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் கைகள் கட்டப்பட்ட இளைஞரை வண்டியில் இருந்து தள்ளிவிட்டு, அரிவாளால் வெட்டி கொலைச் செய்துவிட்டு, தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் ராகேஷ் என்பதும், அவர் மீது கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது.
கடந்த 2021- ஆம் ஆண்டு நந்தியப்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் திருடிய போது, அதனை தட்டிக் கேட்ட வாகன உரிமையாளரை ராகேஷ் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாகக் கொலை செய்யப்பட்டிருக்கலாமா? அல்லது ஏதேனும் முன் விரோதத்தினால் நடந்ததா? என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் அருகே ரவுடி தலைத் துண்டிக்கப்பட்டு கொலைச் செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. பழி வாங்கும் நடவடிக்கையா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.