திருப்புவனம் சம்பவத்தில் திடீர் திருப்பம் : “நிகிதா குடும்பமே Fraud"- கணவர் பரபரப்பு புகார்..!

மடப்புரம் காளியம்மன் கோவிலில் காவலராக பணியாற்றியவர் அஜித் குமார். நிகிதா மற்றும் அவரின் தாய் சிவசாமி ஆகியோர் மடப்புரம் கோவிலுக்கு வந்த போது, காரினை பார்க் செய்யுமாறு அஜித் குமாரிடம் சாவியை கொடுத்துள்ளனர். ஆனால் அஜித் குமாருக்கு கார் ஓட்ட தெரியாது.
இதனால் இன்னொரு நபரின் உதவியோடு கார் பார்க் செய்துவிட்டு, நிகிதாவிடம் சாவியை கொடுத்துள்ளார். இதன்பின் காரில் இருந்த 9 சவரன் நகையை காணவில்லை என்று நிகிதா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கின் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டு விசாரிக்கும் போதுதான், காவலர்களின் தாக்குதலில் அஜித் குமார் உயிரிழந்தார்.
இந்த நிலையில் நிகிதா மற்றும் சிவகாமி ஆகியோர் மீது பல்வேறு பண மோசடி புகார் எழுந்துள்ளன. 2011ஆம் ஆண்டிலேயே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.16 லட்சம் பண மோசடி செய்ததோடு, பணம் கொடுத்தவர்களை மிரட்டிவிட்டு தலைமறைவாகி இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் இன்னும் சில புகார்களும் அளிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் நிகிதாவின் பின்னணி குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நிகிதாவின் முன்னாள் கணவர்களில் ஒருவர் ஃபார்வர்டு பிளாக் கட்சியின் முன்னாள் தலைவர் திருமாறன். தற்போது நிகிதா குறித்து திருமாறனிடன் கேட்ட போது, நிகிதா என்ற பெண்மணியை 21 ஆண்டுகளுக்கு முன்பே தெரியும். அவர் செய்த திருமண மோசடியில் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். அப்போது நான் சிறிய நபர்தான்.
அவர் அப்போதே தாலி கட்டிய பின் ஓடிவிட்டு வரதட்சணை வழக்கு போட்டு பணம் கேட்பவர். ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் கேட்பார். அந்த சமயத்தில் அது பெரிய பணம். மிரட்டி வாங்கி இருக்காங்க.. இந்த நிகிதா என்றால், நகை திருட்டு வழக்கே பொய்யான வழக்காக இருக்கலாம். பணம், நகை எல்லாம் இந்த நிகிதா தொலைப்பதற்கு வாய்ப்பே இல்லை. ஏதாவது அந்த பையனுடன் வாக்குவாதம் வந்திருக்கும்..
அதற்காக பழி வாங்கி இருப்பார்.. நிகிதாவின் குடும்பமே சீட்டிங் குடும்பம். அரசு வேலை வாங்கி தருவதாக பல்வேறு குடும்பங்களை ஏமாற்றி இருக்கிறார்கள். எனக்கே ரூ.10 லட்சம் வாங்கிவிட்டுதான் விவாகரத்து கொடுத்தார்கள். இவர்கள் வாய்மொழியாக கொடுத்த புகாரால், ஒரு இளைஞன் இறந்திருக்கிறார். பெண்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சட்டப் பாதுகாப்பை நிகிதா தவறாக பயன்படுத்துவார்.
அதிகாரமற்றவர்களை அச்சுறுத்துவதையே வேலையாக வைத்துள்ளவர் நிகிதா. மொத்தமாக குடும்பத்தினரை கைது செய்ய வேண்டும். இவர்களுக்கு காவல்துறையில் அதிக செல்வாக்கு இருக்கிறது. அது எப்படி என்று இன்னமும் தெரியவில்லை. இவரின் தந்தை துணை ஆட்சியராக இருந்தவர். நிகிதாவின் தாய் சிவகாமியும் அரசு வேலையில் இருந்தவர் தான். இதனை வைத்து கொண்டு பண மோசடியில் ஈடுபட்டிருக்கிறார்.
2004, ஆகஸ்டில் எனக்கு திருமணம் நடைபெற்றது. அந்த திருமணத்தால் நிறைய வலிகளை அனுபவித்தோம். கோவை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் எஸ்பி-க்கள் அப்போது நிகிதாவின் குடும்பத்தினருக்கு ஆதரவாக இருந்தார்கள். அந்த செல்வாக்கு இன்னும் இருக்கிறது. அஜித் குமார் விவகாரத்தில் நகை திருடு போக வாய்ப்பே இல்லை என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே நிகிதா அளித்த புகாரின் உண்மைத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டு வந்த நிலையில், திருமாறனின் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.