காரைக்கால் சேர்ந்த திருமுருகன் எம்எல்ஏ-விற்கு அமைச்சர் பதவி ?

புதுச்சேரியில் அமைச்சராக இருந்த சந்திர பிரியங்கா கடந்த ஆண்டு முதலமைச்சர் ரங்கசாமியால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், காரைக்கால் வடக்கு தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ திருமுருகனை புதிய அமைச்சராக நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். அவருக்கு முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா வகித்து வந்த துறைகள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது.
இதற்கான அனுமதியை குடியரசுத் தலைவர் வழங்கியிருப்பதாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.