உருக்கமாக பேசிய திருமாவளவன்..! நான் இப்படிதான் கட்சி பெயரை வாங்கினேன்..!

முள்ளிவாய்கால் நினைவு தினம் மே 18 ஆம் தேதி மாநிலம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. அந்த வகையில் சென்னை அம்பேத்கர் திடலில் நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். அப்போது எப்படி விடுதலை சிறுத்தைகள் கட்சி என்ற பெயரை வாங்கியது குறித்து உருக்கமாக கூறியதாவது: தேர்தல் அரசியலில் அடி எடுத்து வைக்க நேர்ந்தது.
தேர்தல் அரசியலில் அடியெடுத்த வைத்த பிறகு இதை ஒரு தேர்தல் அரசியல் கட்சியாக பதிவு செய்ய வேண்டும். அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என்கிற தேவை எழுந்தது.அப்போது நடைபெற்ற விவாதத்தில் பலரும் எனக்கு ஆலோசனை சொன்னார்கள். கட்சிக்கு வேறு பெயர் சூட்டுங்க இது வேண்டுமானால் ஒரு இளைஞர் இயக்கமாக இருந்து விட்டுப் போகட்டும் என்று கூறினார்கள்.
கட்சிக்கு வேறு பெயர் சூட்டுங்க திராவிட முன்னேற்ற கழகம் என்று சொல்லுகிற போது எவ்வளவு மியூசிக்கலாக இருக்கிறது என்று ஒருவர் வந்து என்னிடத்திலே சொன்னார்.இதுபோல ஒரு நல்ல பெயரை தேர்வு செய்து கட்சியை பதிவு செய்யுங்கள் என்று சொன்னார்.நான் அதை ஏற்றுக்கொள்ளவில்லை .
பிறகு தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி என்று எழுதி எடுத்துக்கொண்டு போனபோது அந்த தேர்தல் ஆணையத்தின் அதிகாரி என்னிடத்திலே சொன்னார். மிருகங்களின் பெயர்களை இனிதே நாங்கள் கட்சிக்கு அனுமதிப்பதில்லை என்று முடிவு எடுத்திருக்கிறோம். பெயரை மாற்றி வாருங்கள் என்று திருப்பி கொடுத்து விட்டார். மறுபடியும் நான் அவரிடம் சென்று பேசினேன்.
காஷ்மீர் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்று இருக்கிறதே அதை எப்படி அனுமதீர்கள் என்று கேள்வி எழுப்பினேன்.விடுதலை சிறுத்தைகள் கட்சி என்ற பெயரில் எங்களுக்கு பதிவு செய்து தாருங்கள் வேண்டுகோள் வைத்தேன் அவர் ஒரு ஜனநாயக சிந்தனையாளர் கொஞ்சம் யோசித்தார். இரண்டு நாட்கள் கழித்து வாருங்கள் பார்ப்போம் என்றார்.
பிறஊ போனேன் விசிக பதிவு செய்து அந்த பெயரை நமக்கு இதை நான். இதை நினைவு படுத்துவதற்கு காரணம் தனக்கு 20களின் தொடக்கத்திலே எனக்கு என்ன உணர்வும் புரிதலும் இருந்ததோ அதுதான் ஐந்துகளிலும் இருந்தது இன்றைக்கு 60 களிலும் இருக்கிறது அதிலிருந்து நான் வலுவவில்லை நழுவவில்லை விலகவில்லை என்று உருக்கமாக கூறினார்.