சட்டமன்றத் தேர்தலுக்கு குட்பை சொல்லும் திருமாவளவன்! அதிரடி முடிவி்ன் பின்னணி !

"எங்களுக்கு தேர்தல் முக்கியம். அதைவிட மனுதர்மம் பல மடங்கு முக்கியம்" என காட்டம் காட்டிய திருமா, "தேவை எனில் வரும் சட்டமன்றத் தேர்தலையும் புறக்கணிக்க தயங்கமாட்டோம்" என அனல் கக்கியுள்ளார்.
பெண்களை அவதூறாக பேசியதாக பாஜகவினர் கொடுத்த புகாரின் பேரில் திருமாவளவன் மீது சென்னை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனை கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், கடந்த 10 நாட்களில் நாங்கள் 3 போராட்டங்களை நடத்தியுள்ளோம். பலரும் தேர்தலை நோக்கி செல்லும் போது நாங்கள் மாற்றத்துக்காக போராடிக் கொண்டிருக்கிறோம். நான் மனு தர்மத்தைப் பற்றி பேசியதை அவர்களே அதை அதிக அளவில் பரப்பிவிட்டார்கள்.
முதலில் என்னை அவதூறு பேசியவர்கள் இப்போது அந்த மனுதர்மம் நூல் உண்மையல்ல என்கின்றனர். மனு தர்மத்தின் ஒரிஜினலை எடுத்து வாருங்க. நாங்களும் சமஸ்கிருதம் படித்த அறிஞர்களை அழைத்து வருகிறோம். ஒன்றாக வைத்து விவாதிப்போம். வரும் தேர்தலில் திமுக தோற்க வேண்டும் என்பது தான் லட்சியம். அதற்காகத் தான் என் மீது தாக்குதல்.
தேவைப்படும் பட்சத்தில் நாங்கள் தேர்தலையும் புறக்க தயங்க மாட்டோம். இதைவிட எங்களுக்கு ஒரு சரியான வாய்ப்பு கிடைக்காது என்றார்.
ஆக, வரும் தேர்தலை புறக்கணித்து விட்டு, தமிழகம் முழுக்க திமுக கூட்டணிக்கு ஆதரவாகவும், பாஜகவுக்கு எதிராகவும் தேர்தல் பிரச்சாரம் செய்ய திருமாவளவன் தயாராகி விட்டதாக தெரிகிறது.