தமிழகத்தில் தாமரை வளர வாய்ப்பு இல்லை - திருமாவளவன்..!
சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் புகைப்படக் கண்காட்சி விழா நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், . I.N.D.I.A. கூட்டணி வெல்லப் போகிறது. என பிரதமர் நரேந்திர மோடியே உண்மையை ஒத்துக் கொண்டார். தமிழ்நாட்டில் 100% பாஜக வெற்றிக்கு வாய்ப்பு இல்லை. தேர்தல் முடிவு கருத்துகணிப்புகளை பொருட்படுத்தவில்லை. மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு I.N.D.I.A. கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என முடிவு எடுக்கப்படும். அதன் முடிவு தெரியும். விரைவில் இந்தியாவை சூழ்ந்துள்ள இருள் அகன்று, ஜூன்4-ல் புதிய விடியல் மலரும்” என்றார்.
கடந்த 10 ஆண்டுகால இருண்ட ஆட்சி இந்தியாவை அகல பாதாளத்தில் சரிய வைத்துள்ளது. ஆனால், ஊடகங்கள் அந்த இருண்ட ஆட்சியின் கைப்பாவையாகவே செயல்பட்டு வந்துள்ளன என்பதுதான் கடந்த காலங்களில் கண்ட கசப்பான உண்மை. அது இன்றும் தொடர்கிறது. நாளை மறுநாள் மக்கள் எழுதிய தீர்ப்பு வெளியாக இருக்கிறது. இந்தியா சூழ்ந்த இருட்டு அகன்று புதிய வெளிச்சம் பிறக்க இருக்கிறது. இந்தியா கூட்டணி ஆட்சி மலரவுள்ளது” என்று தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் பாஜக வெல்லும் என கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளதே என்ற கேள்விக்கு, “தமிழ்நாட்டில் பாஜக வெற்றிக்கு 100 சதவிகிதம் வாய்ப்பு இல்லை. 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றிபெறும்" என்று தெரிவித்தார்.