திருமாவளவன், துரை வைகோ,விஜயபிரபாகரன் முன்னிலை..!

மதிமுக வேட்பாளர் துரை வைகோ திருச்சி மக்களவை தொகுதியில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். தற்போது துரை வைகோ 26,186 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் கருப்பையா 12,981, நாம் தமிழர் வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் 5,847, அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் 4,047 வாக்குகளும் பெற்றுள்ளனர். மதிமுகவின் துரை வைகோவுக்கு தேர்தல் ஆணையம் பம்பரம் சின்னம் வழங்க மறுத்த நிலையில், தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்டார்.
சிதம்பரம் தனி தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தற்போது முன்னிலையில் இருந்து வருகிறார். அவர் 18580 வாக்குகள் பெற்றுள்ளார். தொடக்கத்தில் அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சந்திரகாசன் முன்னிலை வகித்து வந்த நிலையில் தற்போது திருமாவளவன் முந்தியுள்ளார். பாஜகவின் கார்த்தியாயினி தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார்.
விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளரான தேமுதிகவின் விஜயபிரபாகரன் 163 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறார். இந்நிலையில், விருதுநகர் தொகுதியில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.