#BIG NEWS : விஜயுடன் ஒரே மேடையை பங்கேற்பதை உறுதி செய்த திருமாவளவன்..!
திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி விசிக கட்சி தவெக உடன் கூட்டணி அமைக்குமா என்பதே பலரின் கேள்வியாக இருந்தது. ஆனால் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக உடனே கூட்டணி தொடரும் என்று திருமாவளவன் தெரிவித்து வருகிறார்.
இதற்கு முக்கிய காரணம் தவெக மாநாட்டில் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும் என்று விஜய் கூறி அரசியலில் பரபரப்பை கிளப்பினார். திருமாவளவனின் நீண்ட நாள் கோரிக்கைக்கு விஜய் ஆதரவு கொடுத்த நிலையில் தவெக - விசிக கூட்டணிக்கான அச்சாரமாகவே இந்த அறிவிப்பு பார்க்கப்பட்டது.
இந்நிலையில் டிசம்பர் 06 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் அம்பேத்கர் புத்தக வௌியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்கும் நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இருவரும் ஒரே மேடையில் பங்கேற்பார்களா? கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையும் நடைபெறுமா? என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன.
இந்நிலையில் விஜயுடன் ஒரே மேடையை பங்கேற்பதை உறுதி செய்த திருமாவளவன்,"நூல்வெளியீட்டு விழாவில் பங்பேற்பதாலே அணி மாறிவிடுவோம் என்பது எந்த வகை உளவியல்?"என கேள்வி எழுப்பியுள்ள திருமாவளவன், முதலில் முதலமைச்சர் வெளியிட நான் பெற்றுக்கொள்வதாகவே திட்டமிடப்பட்டிருந்தது என கூறியுள்ளார். நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்பார் என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டதாகவும், அப்போது விஜயின் தவெக மாநாடு நடைபெறவில்லை எனவும் கூறியுள்ளார். இன்னொரு கூட்டணிக்கு செல்ல என்ன தேவை எழுந்துள்ளது எனவும் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
விஜயுடன் ஒரே மேடையை பகிரும் திருமா#TVK #TVKVijay #Thirumavalavan #VCK #NewsTamil #NewsTamil24x7 pic.twitter.com/ko3JkzgBbJ
— News Tamil 24x7 (@NewsTamilTV24x7) November 8, 2024