1. Home
  2. தமிழ்நாடு

தவெக தலைவர் விஜய் கருத்துக்கு திருமா பாராட்டு..தமிழிசை எதிர்ப்பு..!

1

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் பள்ளி மாணவர்களுக்கு விருது மற்றும் ஊக்கத்தொகை வழங்கி வருகிறார். முன்னதாக பேசிய விஜய், ”ஜாலியாக படியுங்கள், இந்த உலகம் ரொம்ப பெரியது, வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கிறது. ஒன்று கிடைக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். கடவும் நமக்காக அடுத்த வாய்ப்பை வைத்திருப்பார். நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம்” என மாணவர்களுக்கு அட்வைஸ் கொடுத்தார்.

 விருது வழங்கும் விழாவில் மாணவர்களிடையே பேசிய விஜய், “நீட் தேர்வை விலக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். நீட் தேர்வுக்கு எதிராக விஜய் பேசிய கருத்துக்கு விசிக தலைவர் திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “நீட் தொடர்பாக விஜய் முன்வைத்த கருத்துகளை வரவேற்கிறோம்; பாராட்டுகிறோம். தமிழ்நாட்டில் பாஜகவை தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டுள்ளன. அந்த வரிசையில் விஜய்யும் இணைந்துள்ளார்” என்றார். முன்னதாக மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் பேசிய தவெக தலைவர் விஜய், நீட் தேர்வுக்கு எதிராக தனது கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “மாணவர்கள் மத்தியில் விஜய் பேசிய கருத்து வருந்தத்தக்கது. மாணவர்களை ஊக்குபடுத்தும் வகையில் தான் விஜய் பேசியிருக்க வேண்டும். நீட் தேர்வில் நடக்கும் நிர்வாக குளறுபடிகளை சீர் செய்ய முடியுமே தவிர, நீட் தேர்வை முழுமையாக ஒழிக்க முடியாது” என்றார்..

இது குறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன், “விஜய் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, நீதிமன்றம் சென்று நீட் விலக்கு பெறட்டும்.” என்றார்.

Trending News

Latest News

You May Like