1. Home
  2. தமிழ்நாடு

தி.மு.க. ஆட்சியின் அவலம் குறித்து திண்ணை பிரச்சாரம் செய்ய வேண்டும் : செல்லூர் கே.ராஜூ..!

1

மதுரை மாநகர் மாவட்ட  வடக்கு 5-ம் பகுதி அதிமுக சார்பில் பகுதி செயலாளர்கள் வக்கீல் நாட்டாமை கே.அசோகன் தலைமையில் மேலமடையில் நடைபெற்ற புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகளுக்கு புதிய உறுப்பினர் அட்டைகளை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. வழங்கினார். பின்னர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு வடக்கு 5 - ம் பகுதி செயலாளர் வக்கீல் நாட்டாமை அசோகன் தலைமையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. குடை, குடம் போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதில் நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், ஆர். அண்ணாதுரை, பா.குமார், ஜெ.இஷிகா, வி.பி.ஆர்.செல்வகுமார், மலர்விழி,வட்ட செயலாளர்கள் மானகிரி பி.தனபால், தினேஷ்அலெக்சான்டர், ராமசீனிவாசன், கே.கே.நகர் மணி, கோமதிபுரம்குமார், மேலமடை ராமச்சந்திரன், வி.எஸ்.பாண்டியராஜன் மற்றும் மேலமடை ஆர்.பாண்டியராஜா என்.சுகுமாறன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகர மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேசியதாவது-

தி.மு.க.வை பட்டி தொட்டி எங்கும் இன்றைக்கு 50 வயதை கடந்த அனைவரையும் அறியச் செய்தது எம்.ஜி.ஆர். இந்த கட்சியை தொடங்கியது நானாக இருக்கலாம்.ஆனால், இதை பட்டி தட்டி எங்கும் வளர்த்தெடுத்தது எனது அருமை தம்பி எம்.ஜி.இராமச்சந்திரன் என அண்ணாவே கூறியுள்ளார். 1967-ல் ஆட்சியைப் பிடித்தவுடன் அண்ணா எனக்கு மாலை மரியாதை போடுவதை விட ராயப்பேட்டையில் மருத்துவமனையில் உள்ள எனது தம்பி எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு அணிவியுங்கள். இந்த வெற்றிக்கு அவன் தான் காரணம் எனக் கூறியவர் அண்ணா. இன்றைக்கு நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு நடைபெற்ற கலைஞர் நாணயம் வெயீட்டு விழாவிற்கு மத்திய அரசை அழைக்கும் தி.மு.க. ஏன் காங்கிரசை கட்சியினரை அழைக்கவில்லை. தேர்தல் முடிந்த பிறகு காங்கிரஸ் கட்சியினரை கைகழுவி விட்டது தி.மு.க. 

திமுக ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்படும் என்பதை அறிந்து வாக்களித்த அவர்களையும் இந்த திமுக அரசு ஏமாற்றி உள்ளது. சிறுபான்மையினரின் பாதுகாவலர் என சொல்லும் திமுக அரசு அவர்களுக்கு என்ன திட்டத்தை கொண்டு வந்தது.வரும் 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியார் தலைமையிலான அ.தி.மு.க.மாபெரும் வெற்றி பெற்று அரியணை ஏறும். மக்களுக்கான பல நலத்திட்டங்களை உருவாக்கி அதை செயல்படுத்தக்கூடிய திறமை படைத்தவர் எடப்பாடியார். இந்த உறுப்பினர் கார்டு என்பது இன்னைக்கு எளிதாக நமக்கு கிடைக்கிறது.கழகம் தொடங்கிய காலத்தில்  நாலுவருஷம் கழிச்சு தான் உறுப்பினர் கார்டு வந்தது தலைவர் கையெழுத்து போட்டது. அப்புறம் அம்மா கையெழுத்து போட்ட கார்டு நமக்கு கிடைத்தது.

ஆனால் இன்றைக்கு நம்ம பொதுச்செயலாளர் எடப்பாடியார் கிளை செயலாளரில் இருந்து வந்தவர். கிளைச் செயலாளரில் தொடங்கி தலைமை நிலைய செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சராக பொறுப்பேற்று இன்னைக்கு முதலமைச்சராக உயர்ந்தார். எனவே நமது கழகத் தொண்டுகள் அனைவரிடத்திலும் நம்முடைய உறுப்பினர் அட்டை இருக்க வேண்டும் என்ற அடிப்படையோடு இதை நீங்கள் ஒவ்வொரு பகுதியாக சென்று கூட்டம் போட்டு கொடுக்க வேண்டும் என்று எங்களிடம் எடப்பாடியார் பணித்தார். அந்த வகையில் இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.

இந்த 3 ஆண்டுகால திராவிட முன்னேற்ற கழக ஆட்சிக்கு வருவதற்கு முன்னே என்ன வாக்குறுதி கொடுத்தாங்க, என்ன செஞ்சிருக்காங்க. அம்மாவுடைய ஆட்சி எப்படி இருந்தது. அம்மா மறைந்த பிறகு எடப்பாடியார்  நான்காண்டுகள் சிறப்பான ஆட்சியை கொடுத்தார். எனவே தி.மு.க. கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. எனவே இதனை கழக தொண்டர்களாகிய நீங்கள் திண்ணை பிரச்சாரம் மூலமாக மக்களிடத்தில் எடுத்து சொல்லணும்.காரணம் என்னவென்றால் நம்ம வந்து ரெண்டு ஆளுங்கட்சி மத்தியில் இருக்கிற ஆளுங்க செய்யும் நாம் இருக்கிறோம் அது ஒரு மதவாத இயக்கம்.

அதனால் தான் நம்ம பொதுச் செயலாளர் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று வெளியே வந்தார் இங்கே தமிழகத்தில் ஒரு குடும்பத்தின் ஆட்சி மன்னர் பரம்பரை உடைந்து விட்டது. ஆனால் கலைஞர் குடும்பத்தினுடைய பரம்பரை இன்னைக்கு ஒழிக்கவில்லை. 2026 தேர்தல் நமக்கு கிடைத்த ஒரு அற்புதமான வாய்ப்பு. இந்த தேர்தலோடு தி.மு.க.வை மக்கள் வீட்டிற்கு அனுப்புவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Trending News

Latest News

You May Like