1. Home
  2. தமிழ்நாடு

புதுசு புதுசா யோசிக்கிறாங்க..! டிஜிட்டல் அரெஸ்ட் பெயரில் ரூ.42 லட்சம் மோசடி..!

1

 தினம் தினம் தினுசு தினுசாக சைபர் கொள்ளையர்கள் கோடிகளில் மோசடி செய்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், செல்போனில் வீடியோ அழைப்பில் டிஜிட்டல் அரஸ்ட் என்ற பெயரில் நாகா்கோவிலை சோ்ந்த முதியவர் ஒருவரை மிரட்டி ரூ.42 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக சைபா் குற்றப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நாகா்கோவில் வடிவீஸ்வரம் பகுதியைச் சோ்ந்த 80 வயது முதியவர் ஒருவரின் செல்போனுக்கு கடந்த வாரம் வீடியோ அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவா் காவல் துறை சீருடையில் இருந்துள்ளாா். தன்னை மும்பை காவல் துறை அதிகாரி எனக் கூறிய அவா், சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதால் உங்களை தற்போது வீட்டுக்காவலில் வைத்துள்ளோம் என்று கூறி போலியான கைது ஆணையை காட்டி மிரட்டியுள்ளாா்.

இதைக் கேட்டு முதியவா் அச்சம் அடைந்த நிலையில், தொடா்ந்து பேசிய அந்த நபா், உங்களது வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை எடுத்து ரிசா்வ் வங்கி மூலமாக சரிபாா்த்துவிட்டு மீண்டும் உங்களுக்கு அனுப்புவோம் என்று கூறியுள்ளாா். மேலும் முதியவரின் வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற்று அவரது கணக்கிலிருந்து ரூ.42 லட்சத்தை மோசடி செய்து இருக்கிறார். 

சைபர் தாக்குதல்

முதியவரின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்ட அடுத்த சில நிமிஷங்களில் வீடியோ அழைப்பை அந்த நபா் துண்டித்துவிட்டாா். அதன் பிறகே தான் ஏமாற்றப்பட்டது முதியவருக்கு தெரியவந்தது. உடனடியாக இது குறித்த புகாரின்பேரில் குமரி மாவட்ட சைபா் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா். இது போன்ற சைபா் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனா்.

Trending News

Latest News

You May Like