போண்டா என நினைத்து , வெடிகுண்டை கடித்த சிறுவன் !! பலியான அதிர்ச்சி சம்பவம் !!

போண்டா என நினைத்து , வெடிகுண்டை கடித்த சிறுவன் !! பலியான அதிர்ச்சி சம்பவம் !!

போண்டா என நினைத்து , வெடிகுண்டை கடித்த சிறுவன் !! பலியான அதிர்ச்சி சம்பவம் !!
X

திருச்சியில் மீன்பிடிக்க ஏதுவாக பாறையை உடைக்க பயன்படும் 3 நாட்டு வெடிகுண்டுகளை தமிழரசன், மோகன்ராஜ் ஆகிய இருவரும் வாங்கி வந்துள்ளனர்.  மீன்களை பிடித்துவிட்டு அதனை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள பூபதி என்பவரின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அப்போது அங்கு கையில் எஞ்சியிருந்த வெடிகுண்டை வைத்துள்ளனர். அதை போண்டா என நினைத்து அந்த வீட்டில் இருந்து 6 வயது சிறுவன் எடுத்து கடித்துள்ளான். அது வெடிக்கவே சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

தகவல் அறிந்த போலீசார் தமிழரசன், மோகன்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். அவர்களுக்கு வெடிகுண்டை சப்ளை செய்தவர் யார் என்பது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அவர்கள் குடும்பத்தினரையும் , அப்பகுதி மக்களைளயும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

Newstm.in

Next Story
Share it