1. Home
  2. தமிழ்நாடு

கிரிவலம் செல்லும் போது செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை...!

1

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவில் உலக பிரசித்தி பெற்றது. திருவண்ணாமலையில் மலையே சிவபெருமானாகக் கருதப்படுகிறது. எனவே கோவிலில் இறைவனை வலம் வருதலைப் போல 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட மலையை வலம் வரும் வழமை இங்குள்ளது. இந்த கிரிவலப்பாதையில் மாதந்தோறும் வரும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். இம்மலையில் இன்றும் பல சித்தர்கள் வாழ்ந்து வருவதாக வரலாறு.

மலையை வலம் வரும்போது மனிதர்கள் இடப்பக்கம் நடக்க வேண்டும், ஏனென்றால் மலையை ஒட்டியுள்ள வலப்பக்கம் சித்தர்களும், யோகிகளும், தேவர்களும் வலம் வருவதாக ஐதீகம்.

கிரிவலம் செல்லும்போது பஞ்சாச்சர நாமத்தையோ (நமசிவாய, சிவாயநம) அல்லது திருமுறைகளையோ ( தேவாரம், திருவாசம்……) உச்சரிக்க வேண்டும். அதை தவிர்த்து வேற எதையும் பேசக்கூடாது.

கிரிவலம் செல்லும்போது நிதானமாக நடக்க வேண்டும், அவசரமாகவோ, வேகமாகவோ அல்லாத மற்றவர்களை இடித்து கொண்டுச் செல்லக் கூடாது.

செய்யக்கூடாதவை :

அசைவ உணவு மற்றும் போதைப் பொருட்களைத் தவிர்க்கவும்: இறைச்சி சாப்பிடுவதையும் மது அல்லது பிற போதைப் பொருட்களை உட்கொள்வதையும் தவிர்க்கவும்.

வாக்குவாதங்கள் மற்றும் எதிர்மறையைத் தவிர்க்கவும்: நேர்மறையான செயல்களில் ஈடுபடுவதும், எதிர்மறையான செயல்களைத் தவிர்ப்பதும் நல்லது. யாரிடமும் கோபமாகவே அல்லது தகாத அல்லது கெட்ட வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள். உங்கள் வார்த்தைகள் மற்றும் செயல்களில் கவனமாக இருங்கள். குற்றங்கள் மற்றும் வாக்குவாதங்களைத் தவிர்ப்பதும் முக்கியம். 

கிரிவலம் செய்வதால் உண்டாகும் பலன்கள்:

மலைகளை சுற்றி பல சித்தர்கள் வாழ்வார்கள். நாம் கிரிவலம் செய்யும்போது கடவுளின் அருளோடு சித்தர்களின் ஆசியும்  ஆற்றலும் நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் அம்மாவாசை பௌர்ணமி தினங்களில் கிரிவலம் மேற்கொள்வது மிகச் சிறப்பாகும்.அருள் வேண்டுவோருக்கு அம்மாவாசையிலும் பொருள் வேண்டுவோருக்கு  பௌர்ணமியிலும் கிரிவலம் செய்யலாம் என்ற வாக்கு கூட உள்ளது.

ஏனென்றால் அந்த தினங்களில் மூலிகைகள் தங்களின் முழு பலனையும் வெளிப்படுத்தும், அதன் அபூர்வ சக்தியும் நமக்கு கிடைக்கும். குறிப்பாக பௌர்ணமி தினத்தில் சில அபூர்வ மூலிகைகள் அதன் ஆற்றலை வெளிப்படுத்தும்.

நம்முடைய வினைகள் மனம், மெய் ,மொழி இவைகளின் மூலம் தான் வரும். இந்த வகையில் இறைவனை நினைத்து நம் உடலை வருத்தி செய்யும் செயலானது நம் வினைகளை நீக்கும், தெய்வ அனுகூலம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

கிழமைகளும் கிரிவலதின் பலன்களும் :

ஒவ்வொரு நாளும் கிரிவலம் செல்லும்  போது ஒவ்வொரு பலன்கள் நமக்கு கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.

  • ஞாயிறு கிரிவலம் நோய் நீங்கும், சிவனின் அருள் கிடைக்கும்.
  • திங்கள் கிரிவலம் பாவம் குறைந்து புண்ணியம் பெருகும்.
  • செவ்வாய் கிரிவலம் வறுமை நீங்கும், கடன் நீங்கும் ,சகல சம்பத்தும் கிடைக்கும்.
  • புதன்கிரிவலம் கலைகளில் வளர்ச்சி கிடைக்கும்.
  • வியாழன் கிரிவலம் குருவின் அருள் கிடைக்கும், ஞானம் பெருகும்.
  • வெள்ளி கிரிவலம் செல்வம் பெருகும், குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
  • சனி கிரிவலம் பிணியை போக்கும் ,வியாபாரத்தில் விருத்தி கிடைக்கும், தோஷங்கள் அகழும்.

இப்படி ஒவ்வொரு நாட்களுக்கும் ஒவ்வொரு பலன்கள் உண்டு. அதிலும் பிரம்ம முகூர்த்தத்தில் கிரிவலம் மேற்கொள்வது மிகச் சிறப்பாகும். 

Trending News

Latest News

You May Like