1. Home
  2. தமிழ்நாடு

பௌர்ணமி தினத்தன்று வாங்க வேண்டிய பொருட்கள்..!

1

பொதுவாகவே வெள்ளிக்கிழமையில் சில பொருட்களை வாங்கி வைத்தால் செல்வ வளம் பெருகும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். பலரும் இன்றளவும் அந்த பொருட்களை வெள்ளிக்கிழமை தோறும் வாங்கி வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதேபோல்தான் வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய பௌர்ணமி தினத்தன்று சில பொருட்களை வாங்கி வைக்கும்பொழுது நமக்கு செல்வ வளம் உயரும்.

பொதுவாக வெள்ளிக்கிழமை என்பது மகாலட்சுமி மற்றும் சுக்கிர பகவானுக்குரிய கிழமையாக திகழ்கிறது. அதிலும் குறிப்பாக வெள்ளிக்கிழமையில் சுக்கிர கோரையில் கல் உப்பு வாங்குவது என்பது மிகவும் விஷேஸ்வரமான ஒன்றாக திகழ்கிறது. வெள்ளிக்கிழமை அன்று பௌர்ணமி என்பது காலை 7:00 மணிக்கு மேல் ஆரம்பித்து சனிக்கிழமை காலை 7:00 மணிக்குள் முடிவடைந்து விடுகிறது. அதனால் வெள்ளிக்கிழமை முழுவதும் ராகு காலம், எமகண்டத்தை தவிர்த்து மீதம் இருக்கும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் நாம் இந்த பொருட்களை வாங்கி வைக்கலாம்.

மகாலட்சுமி வம்சம் பொருந்திய கல் உப்பை வெள்ளிக்கிழமை அன்று மறவாமல் வாங்கிக் கொள்ளுங்கள். அடுத்ததாக மஞ்சள் குங்குமம் வீட்டில் எவ்வளவு மஞ்சள் குங்குமம் இருந்தாலும் பரவாயில்லை பௌர்ணமி தினத்தன்று கண்டிப்பான முறையில் மஞ்சளும் குங்குமமும் வாங்கி வீட்டில் வைக்க வேண்டும். அதேபோல் வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய பௌர்ணமி தின தினத்தன்று வீட்டில் சுபகாரியம் நடைபெறுவதற்குரிய பேச்சுகளை முன்னிறுத்த வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் புதிதாக ஆடை வாங்கினாலும் செல்வ வளம் பெருகும் என்று கூறப்படுகிறது.

மகாலட்சுமிக்கு விருப்பமான நிறமாக திகழ்வது சிவப்பு, வெள்ளை, வெளிர் சிவப்பு. ஆடைகளை இந்த நிறத்திலோ அல்லது வெளிர் சந்தனம் போன்ற நிறத்திலோ வாங்குவதன் மூலம் மகாலட்சுமி தாயாரின் அருள் என்பது பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஒரு சிலரின் இல்லங்களில் சோழி வைத்து வழிபடும் வழக்கம் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் பௌர்ணமி தினத்தன்று புதிதாக ஒரு சோழியாவது வாங்கி வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

அதோடு மட்டுமல்லாமல் இது சுக்கிர பகவானுக்குரிய தினமாகும் கருதப்படுவதால் சுக்கிர பகவானின் உலோகமான வெள்ளியால் செய்யப்பட்ட மகாலட்சுமிக்கு நாணயத்தை வாங்குவது என்பது மிகவும் சிறப்புக்குரியது. மேலும் யானை பொம்மையை வாங்கி வீட்டில் வைப்பதன் மூலமும் நமக்கு செல்வ வளம் என்பது உயரும்.

Trending News

Latest News

You May Like