1. Home
  2. தமிழ்நாடு

திக்...திக்... நிமிடங்கள்... கடைசி பந்தில் கொல்கத்தாவிடம் வீழ்ந்தது பெங்களூரு அணி..!!!

1

கொல்கத்தாவில் உள்ள உலக புகழ் பெற்ற ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் KKR – RCB அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.இந்த போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது . இதையடுத்து பெங்களூரு அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது.அணியின் தொடக்க வீரர்களாக சால்ட் மற்றும் சுனில் நரைன் களமிறங்கினர். ஆரம்பம் முதல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சால்ட் அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்ஸர்களையும் விளாசி 48 ரன்களில் ஆட்டமிழந்தார் .

மற்றொரு தொடக்க வீரரான 10 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார் .அடுத்ததாக ஜோடி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிங்கு இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை மெல்ல மெல்ல உயர்த்தினர் .இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி 222 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி பேட்டிங் செய்தது.

கொல்கத்தாவுக்கு எதிராக 223 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி பயணித்த ஆர்சிபி அணிக்கு, டெத் ஓவர் எனப்படும் கடைசி 5 ஓவர்களில் 49 ரன்கள் தேவை. நடப்பு ஐபிஎல் கிரிக்கெட்டில் இது பெரிய ஸ்கோர் கிடையாது என்பதை முந்தைய போட்டிகளில் காண முடிந்தது. எனவே, பெங்களூரு அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவதற்கான வழி தென்பட்டது. 

ஆனால், ஆட்டத்தின் 16-ஆவது ஓவரை வீசிய ஹர்ஷித் ராணா வெறும் 7 ரன்கள் மட்டுமே கொடுத்து ஆர்சிபி-க்கு இடி போன்று அடி கொடுத்தார். இதை மிஞ்சும் வகையில் அடுத்த ஓவரை வீசிய வருண் சக்கரவர்த்தி 5 ரன்கள் மட்டுமே கொடுத்து வெற்றியை கொல்கத்தாவின் வழிக்கு கொண்டு வந்தார். ஆட்டத்தின் 18 ஆவது ஓவரை வீசிய ஹர்ஷித் ராணா, 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும் சாய்த்தார். ராணா, வருண் சக்கரவர்த்தி சிக்கனமாக பந்துவீசியதால் கொல்கத்தா அணிக்கு பிரஸர் குறைந்தது.

பெங்களூரு அணிக்கு கடைசி இரு ஓவர்களில் 31 ரன்கள் தேவை. ஆனால், சிறந்த ஃபினிஷர் தினேஷ் கார்த்திக் களத்தில் இருந்து நம்பிக்கை அளித்தார். ரஸல் வீசிய அந்த ஓவரின் முதல் இரு பந்துகளிலும் பந்தை அடித்துவிட்டு ஓடாமல் நின்றார் தினேஷ் கார்த்திக். எதிர்புறம் கரண் சர்மா இருந்தால் அவருக்கு ஸ்டிரைக் கொடுக்காமல் தானே பார்த்துக்கொள்கிறேன் என்ற பாணியில் அடித்து ஆட முற்பட்டார். இதனால், 3 ஆவது பந்தில் சிக்சர் பறக்கவிட்ட தினேஷ் கார்த்திக், 5 ஆவது பந்தை எல்லைக்கோட்டுக்கு விரட்டி எதிர்பார்ப்பை எகிற செய்தார். இருந்த போதும் கடைசிப் பந்தை தூக்கி அடிக்க முற்பட்டு கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். அப்போதே வெற்றி உறுதி என்பது போல் கொல்கத்தா வீரர்கள் மட்டும் அல்ல ரசிகர்களும் உற்சாகத்தில் திளைத்தனர். 

2024 ஐபிஎல் கிரிக்கெட்டின் காஸ்ட்லி வீரர் மிரட்டல்: கடைசி ஓவரில் ஆர்சிபி அணிக்கு 21 ரன்கள் தேவை என்ற நிலையில், ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஒப்பந்தமான மிச்செல் ஸ்டார்க் பந்துவீசினார். இவரை கொல்கத்தா அணி ரூ.24.75 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. இதன் மூலம் இவர் வீசும் ஒவ்வொரு பந்துக்கும் சுமார் ரூ.7 லட்சம் கொடுக்கப்படுகிறது. அது எப்படி என்றால் மிச்செல் ஸ்டார்க் ஒவ்வொரு போட்டியிலும் தலா 4 ஓவர்கள் வீசுகிறார். அப்படியானால் ஒரு போட்டிக்கு 24 பந்துகள் வீசுகிறார். அதன்படி கேகேஆர் அணி 14 லீக் போட்டிகள் கடந்து பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறினால் குறைந்தது 15 முதல் 17 போட்டிகளில் விளையாட நேரிடும். 

அந்த வகையில் 360 பந்துகள் வீசும் பட்சத்தில் ஒவ்வொரு பந்துக்கும் ரூ.7 லட்சம் என்ற அடிப்படையில் ரூ.24.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். இந்த அளவிற்கு காஸ்டியாலான வீரர் பந்துவீச வந்ததால் ஏறக்குறையே கொல்கத்தா வெற்றி உறுதியானதாகவே அனைவரும் கருதினர். ஆனால், அவுட் சைடு வீசிய பந்தை, டீப் பாய்ன்ட் திசையில் பறக்க விட்டு கரண் சர்மா மிரட்டினார். அவர் அடித்த அழகை பார்க்கும் போது முந்தைய ஓவரில் தினேஷ் கார்த்திக் ஏன் ஸ்டிரைக் கொடுக்கவில்லை என்ற கேள்வி எழத்தான் செய்தது. 

ஸ்டார்க் வீசிய இண்டாவது பந்து டாட் பாலாக அமைந்தது. போட்டி முடிந்தது என்று நினைத்திருக்கையில் மூன்றாவது மற்றும் 4 ஆவது பந்தை சிக்சர் பறக்கவிட்டு ரசிகர்களை இருக்கையின் நுனிக்கு கொண்டு வந்தார். விறுவிறுப்பின் உச்சம் தொட்ட இந்த போட்டியில் கடைசி 2 பந்துகளில் 3 ரன்கள் தேவை என்ற போது கரண் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். ஆட்டத்தின் கடைசிப் பந்தில் மூன்று ரன்கள் வேண்டும், இரண்டு ரன்கள் எடுத்தால் சூப்பர் ஓவர். விறுவிறுப்பின் உச்சம் தொட்ட போட்டியில் ஸ்டார்க் துல்லியமாக வீசிய பந்தை, ஃபெர்குசன் கவர் திசையில் அடித்து விட்டு இரண்டாவது ரன்னுக்கு ஓடினார். அங்கு நின்றிருந்த ஃபீல்டர் தூக்கி வீசிய பந்தை லாவமாக பிடித்து பாய்ந்து சென்ற விக்கெட்கீப்பர் பில் சால்ட், ஃபெர்குசனை ரன்-அவுட்டாக்கினார். இதனால், கேகேஆர் ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா ஒரு ரன் வித்தியாசத்தில் வாகை சூடியது. இதுவே, அந்த அணியின் குறைந்த ரன் வித்தியாசத்தில் கிடைத்த வெற்றியாகும். முன்னதாக, 2014 ஆம் ஆண்டு ஷார்ஜாவில் நடைபெற்ற போட்டியில் இதே பெங்களூரு அணிக்கு எதிராக 2 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றியை பதிவு செய்தது.

Trending News

Latest News

You May Like