1. Home
  2. தமிழ்நாடு

இவர்கள் எல்லாம் தண்டுக்கீரையை சாப்பிட கூடாது... மீறி சாப்பிட்டால்...

1

* தண்டுக் கீரையுடன் மிளகையும் , மஞ்சளையும் சேர்த்துக் கஷாயமாகச் செய்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கொழுப்பு கரையும்.

* தண்டுக் கீரையுடன் சிறுபருப்பு ,பூண்டு இரண்டையும் சேர்த்துச் சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் எரிச்சல் தீரும்.

* தண்டுக் கீரையுடன் நெல்லிச் சாறு சேர்த்து அரைத்து சாறு எடுத்து , சாற்றுக்கு சமமாக தேன் கலந்து காய்ச்சி இறக்கி தினமும் இரண்டு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்தும் குணமாகும்.

* தண்டுக் கீரையுடன் , சீரகம் , மஞ்சள் மற்றும் பார்லியைச் சேர்த்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி குணமாகும். நீர் எரிச்சல் , நீர் கடுப்பு மறையும். சிறுநீர் தாராளமாகப் பிரியும்.

* தண்டுக் கீரை , துத்தி இலை ,சீரகம் மூன்றையும் சேர்த்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டு வந்தால் மூலச் சூடு உள்ளிட்ட மூலம் தொடர்பான அனைத்துப் பிரச்சனைகளும்.

முளைக்கீரை வளர்ந்து பெரிதானால், அதுதான் தண்டுக்கீரை.. இந்த தண்டுக்கீரையில் 2 வகைகள் ஒன்று, ஒன்று பச்சையாக இருக்கும். மற்றொன்று சிவப்பு நிறமாக இருக்கும்.. அதனால், இந்த கீரையை சிலர் சிவப்பு கீரை என்றும் சொல்வார்கள்.. சிவப்பு நிற கீரை தண்டு, இதில் சிவப்பு நிற தண்டுக்கீரை சத்தும், ருசியும் அதிகமுள்ளதாகும். பெண்களின் மாதவிடாய் கோளாறுகளை குணமாக்குகிறது.


தண்டுக்கீரையை பொறுத்தவரை எல்லா சத்துக்களுமே இதில் நிறைந்துள்ளன.. வைட்டமின் A, B, C, கால்சியம், இரும்புச்சத்து, புரதம், பொட்டாசியம், மெக்னீசியம், நார்ச்சத்து, தாமிரம், சோடியம், தையமின், கொழுப்புச்சத்து என அத்தனையும் நிறைந்திருக்கின்றன.. அதனால்தான், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கட்டாயம் சாப்பிடக்கூடிய கீரையாக இந்த தண்டுக்கீரை உள்ளது.


இந்த கீரையை பெண்களுக்கு மிகவும் நல்லது.. கருப்பை தொடர்பான பிரச்சனைகள் குறைக்கும் தன்மை இந்த தண்டுக்கீரைக்கு உண்டு. கல்யாணம் ஆகி பல வருடங்களாகியும் சில பெண்களுக்கு கருத்தரிக்க முடியாத நிலைமை இருக்கும்.. அதுபோன்ற பெண்கள் தங்கள் இந்த தண்டு கீரையை அடிக்கடி சமையலில் சேர்த்து கொண்டால், கருப்பை பலம் பெறும்... கருப்பையில் தங்கியிருக்கும் நச்சுக்கள், தொற்றுக்கள் வெளியேறுவதுடன், கருத்தரிக்கும் நிலைமையும் ஏற்படும்.


மலட்டுத்தன்மை என்பது திருமணமான ஆண்களுக்கும் உண்டு.. அதுபோன்ற நபர்கள், இந்த கீரையை சாப்பிடலாம்.. இதனால், உயிரணுக்கள் வலு பெறும்.. இனப்பெருக்க உறுப்புகள் வலுப்பெறும்.


அடுத்ததாக, மூல நோய் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த கீரை ஒரு அருமருந்து என்று சொல்லலாம்... இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில், எந்நேரமும் கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்து வேலை பார்க்கும் நிலைமை உள்ளது.. இதனால் மூலநோய் பாதிப்பு அதிகரித்துவிட்டது.. இந்த மூல நோய்க்கு தண்டுக்கீரை அருமருந்தாகும்.

உள்ளுறுப்புகளுக்கு மிகவும் உபயோகமானது இந்த கீரை.. கல்லீரல், சிறுநீரகம், குடல் என அனைத்து முக்கிய பாகங்களில் ஏற்படும் பிரச்சனைகளை இந்த கீரை சீர்செய்கிறது.. குறிப்பாக, அல்சர் உள்ளவர்கள் இந்த கீரையை கட்டாயம் சமைத்து சாப்பிட வேண்டும்.. இதனால், வயிற்றின் குடல் பகுதிகளில் புண்கள் மெல்ல ஆறிவிடும்.. அத்துடன், மலச்சிக்கலும் தீரும்.. முக்கியமாக, புற்றுநோய்களிலேயே மிக மோசமான, வயிற்றுப்புற்றுநோய் பாதிப்பை தடுப்பதில் பெரும்பங்கு இந்த தண்டுக்கரைக்கு உண்டு. அதேபோல, மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள், கல்லீரல் பாதிப்புகள் கொண்டவர்கள், இந்த தண்டுக்கீரையை சேர்த்து கொள்ள வேண்டும். சிறுநீரகங்களில் படியும் கற்கள் கரைந்துவிடும்.. நச்சுக்கள் வெளியேறும்.

குடல், கணையம் போன்றவைகள் பலம்பெறும்.. நார்ச்சத்து இந்த கீரையில் மிக அதிகம் என்பதால், வயிற்றில் உணவு நன்றாக செரிமானம் ஆகி, மலச்சிக்கலும் தீருகிறது.. நோய் எதிர்ப்பு சக்தியும் பலம்பெறுகிறது.. அதுமட்டுமல்ல, உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், தாராளமாக தண்டுக்கீரையை சாப்பிட்டால் பலன் கிடைக்கும். இந்த கீரையை இளந்தண்டுகளையும் சேர்த்து பொடியாக நறுக்கி, தண்ணீர் மற்றும் மிளகு தூள் சேர்த்து கொதிக்க வைத்து குடிக்கலாம்.

வாய் துர்நாற்றம் நீக்குவதில், தண்டுக்கீரைக்கு பெரும்பங்கு உண்டு. கால்சியம் நிரம்பிய இந்த கீரை, எலும்பு ஆரோக்கியம், கண் ஆரோக்கியம், தோல் ஆரோக்கியத்தை பேணிக்காக்கிறது.


அதிக மருத்துவ குணம் கொண்ட இந்த கீரை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தாராளமாக கிடைக்கிறது.. அதனாலோ என்னவோ, நம் வீடுகளில் இயல்பாக மட்டுமல்ல, அதிகமாகவும் சமைக்கப்படுகிறது இந்த தண்டுக்கீரை.


இந்த தண்டுக்கீரை மிகவும் குளிர்ச்சி வாய்ந்தது என்பதால், சளித்தொல்லை, சைனஸ், ஆஸ்துமா பிரச்சனை, வாதநோய் உள்ளவர்கள், இந்த கீரை சாப்பிடுவதை தவிர்க்கலாம். ஆனால், உடல் உஷ்ணத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நிறைய எடுத்துக் கொள்ளலாம். High BP உள்ளவர்கள், இதை சாப்பிடலாம்.. இதனால் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது. கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதால், இதய நோய் அபாயத்தை மேலும் குறைக்கிறது.

Trending News

Latest News

You May Like