1. Home
  2. தமிழ்நாடு

இன்று வெளியாகும் விமல் படத்தை இவர்கள் இலவசமாக பார்க்கலாம் - படக்குழு அறிவிப்பு..!

1

இன்று திரையரங்கில் வெளியாகும் 'போகும் இடம் வெகுதூரமில்லை' படத்தில் விமல், கருணாஸ், வேல ராமமூர்த்தி, ஆடுகளம் நரேன், அருள்தாஸ், தீபாசங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தில் விமல் ஆம்புலன்ஸ் டிரைவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தெருக்கூத்து கலைஞராக கருணாஸ் நடித்துள்ளார்.அரசியல் புள்ளி ஒருவர் இறந்துவிட அவரது உடலை ஏற்றிக்கொண்டு அவர் சொந்த ஊரான நெல்லை மாவட்டம் களக்காடை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது ஏற்படும் பிரச்சனையை மையமாக வைத்து இயக்கப்பட்டுள்ளது இத்திரைப்படம்.

இந்நிலையில் படக்குழுவினர் ஒரு அறிவிப்பை தெரிவித்துள்ளனர். அதில் ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி ஓட்டுனர்களுக்கு மட்டும் டிக்கெட் இலவசம் முதல் நாள் மட்டும் என அறிவிப்பை அறிவித்துள்ளனர்.
 

Trending News

Latest News

You May Like