“ஒரு ட்வீட் போட 2 ரூபாய் வாங்கி வதந்தி பரப்புகின்றனர்” : குஷ்பூ அதிரடி!

ஒரு ட்வீட்டுக்கு இரண்டு ரூபாய் பெற்றுக் கொண்டு நான் பாஜகவில் இணையப்போவதாக வதந்தி பரப்புகின்றனர் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பூ குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,கட்சி வேலையாக தலைநகருக்கு வந்ததாக தெரிவித்தார். தான் பாஜகவில் இணைவதாக வதந்திகள் வருகிறது என்றும், குஷ்பூ பாஜக வந்தால் நல்லா இருக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள், ஆனால் நான் காங்கிரஸில் நன்றாக, சந்தோஷமாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
ஒரு ட்வீட்டுக்கு ரூ.2 வாங்கிக்கொண்டு நான் பாஜகவில் இணையப்போவதாக வதந்தி பரப்புகிறார்கள் என்றும் நான் உள்துறை அமைச்சருக்கு உடல்நலம் பெற வேண்டும் என வாழ்த்து சொன்னேன், முன்னதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து சொல்லியுள்ளேன், என்னைப் பொருத்தவரை ஒரு ஆரோக்கியமான அரசியல் இருக்க வேண்டும் என கூறினார்.
என் மூலமாக ஒரு ஆரோக்கியமான அரசியல் உருவாவது சந்தோஷமாக உள்ளது என்றும் குஷ்பூ கூறியுள்ளார்.
newstm.in