1. Home
  2. தமிழ்நாடு

புதுசு புதுசா யோசிக்கிறாங்க பா... ராஜஸ்தான் கல்வித்துறை வினோத உத்தரவு..!

1

ராஜஸ்தான் மாநில கல்லூரி கல்வித்துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது;

காயகல்ப் என்ற திட்டத்தின் கீழ் மொத்தம் உள்ள 20 கல்லூரிகளில் சோதனை அடிப்படையில் இந்த உத்தரவு அமல்படுத்தப்படும். மாணவர்கள் கல்லூரியில் சேரும்போது அவர்களின் சிந்தனை நேர்மறையாக இருக்கும் வகையில் கற்கும் சூழல் இருக்க வேண்டும். தமது கல்வியில் அடுத்தக்கட்டம் என்ன என்பதை சிந்திக்கும் வகையில் அமைய வேண்டும்.
 

எனவே, கல்லூரிகள் மாணவர்களுக்கு புத்துயிர் ஊட்டும் வகையில் ஆரோக்கியமான கல்விச்சூழல் இருக்க வேண்டும். அதற்காக 20 கல்லூரிகளில் உள்ள வாயில்களில் வெண்மை (வைட் கோல்டு), ஆரஞ்சு பிரவுன் நிறங்களில் பெயிண்ட்டை 7 நாட்களுக்குள் பூச வேண்டும். பெயிண்ட் பூசப்பட்ட பின்னர், அதை புகைப்படம் எடுத்து கல்வித்துறைக்கு அனுப்ப வேண்டும்.
 

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Trending News

Latest News

You May Like