1. Home
  2. தமிழ்நாடு

அனைத்து கட்சிகள் சார்பில் தேவர் ஜெயந்தி விழா !

அனைத்து கட்சிகள் சார்பில் தேவர் ஜெயந்தி விழா !


ஆண்டிபட்டியில் அனைத்து கட்சிகள் சார்பில் தேவர் ஜெயந்தி விழா கொண்டாட்டப்பட்டது.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113-வது ஜெயந்தி விழா ஆண்டிபட்டியில் அதிமுக,திமுக, அமமுக ,மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளின் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

திமுக சார்பில் ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் தலைமையில் கட்சியினர் ஊர்வலமாக வந்து தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதிமுக சார்பில் கிழக்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய குழு துணைத் தலைவருமான வரதராஜன் தலைமையில் கட்சி நிர்வாகிகளுடன் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஒன்றிய இணைச் செயலாளர் தவச்செல்வம் தலைமையில் கட்சி நிர்வாகிகளுடன் ஆண்டிபட்டி மற்றும் க.விலக்கு பகுதியில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வணங்கினார்கள்.

இதனைத்தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நகர பொதுச் செயலாளர் அழகர்சாமி தலைமையில் கட்சி நிர்வாகிகளுடன் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

Trending News

Latest News

You May Like