தேவர் கல்லூரி முதல்வர் வீட்டில் ரெய்டு.. ரூ.3 கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல்..!

மதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியும், தற்போதைய உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி முதல்வருமானவர் ஓ.ரவி.
இவர், கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை தனது பெயரிலும், தன் மனைவி பெயரிலும் வீடுகள் மற்றும் 22 வாகனங்கள் என சுமார் 2 கோடியே 91 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் சொத்து சேர்த்தாக புகார் எழுந்தது.

இதையடுத்து, மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையிலான அதிகாரிகள், உசிலம்பட்டி அருகே சங்கம்பட்டியில் உள்ள தேவர் கல்லூரி முதல்வர் ரவியின் வீடு மற்றும் செக்காணூரணியில் உள்ள அவரது மகள் சபீதா வீடுகளில் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
‘சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சோதனையில். 2 கோடியே 91 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான சொத்துக்களின் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஓ.ரவி மற்றும் அவருடைய மனைவி சுமதி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’ என லஞ்ச ஒழிப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.