1. Home
  2. தமிழ்நாடு

இந்த 5 ராசிகளின் வாழ்க்கையில் செல்வ செழிப்பு அதிகரிக்கும்..!

1

சுக்கிர பகவான் மீன ராசியில் உச்சம் பெறக்கூடியவர். இவர் ஜனவரி 28ம் தேதி மீன ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். இதனால் மாலவ்ய ராஜ யோகம் உருவாக உள்ளதால், ரிஷபம், மிதுனம் உள்ளிட்ட 5 ராசிகளுக்கு வியாபாரம், தொழில் பெருகி லாபம் கிடைக்கும். வீட்டில் செல்வ நிலையில் முன்னேற்றம் அடைவீர்கள். சுக்கிரனின் அனுக்கிரகத்தால் பல விதத்தில் பலனடையக்கூடிய ராசிகள் யார் என தெரிந்து கொள்வோம்.

ரிஷப ராசி அதிபதியான சுக்கிர பகவான் லாப ஸ்தானமான 11ம் வீட்டில் பெயர்ச்சியாக உள்ளார். இதனா உங்களின் ஆசைகள் நிறைவேற உள்ளது. சுக்கிரனின் மாற்றத்தால் உங்களின் சூழ்நிலை மங்களகரமானதாக அமையும். பொன், பொருள் சேர்க்கையும், ஆசைகள் நிறைவேறவும் வாய்ப்புள்ளது. உங்கள் செயல்களுக்கு ஏற்ற சிறப்பான சாதகமான பலன்களைப் பெற்றிடலாம். தாய் வழி சொந்தங்கள் மூலம் அனுகூலமும், உறவு பலப்படவும் செய்யும். எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறுவர். உடல் நலனில் சற்று கவனமாக இருக்கவும்.

மிதுன ராசிக்கு கர்ம ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்வதால் உங்களுக்கு நிறைய நன்மைகள் நடக்க உள்ளது. முதலாளிகள், மேலதிகாரிகளின் பாராட்டும் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர், வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றி அடையும். வேலை, வியாபார வாய்ப்புகள் உருவாகும். ஏற்றுமதி- இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும்.எதிர் பாலினத்தவர், வேற்று மொழி, மதத்தினரின் ஆதரவு கிடைக்கும். உங்கள் வாழ்க்கையில் சில நல்ல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். தொழில் விஷயத்தில் அதிக லாபம் கிடைக்கும். பணியிடத்தில் புதிய அனுபவங்கள், வாய்ப்புகள் பெறுவீர்கள். வேற்று மதித்தவர், மொழியைச் சேர்ந்தவர்களின் ஆதரவு கிடைக்கும்.

கடக ராசியை சேர்ந்தவர்களுக்கு பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் உச்சம் பெறுவதால் உங்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தாய் வீட்டாரின் ஆதரவு கிடைக்கும். உங்கள் சொந்த தொழிலில் தந்தையின் ஆதரவு, ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்.மாலவ்ய ராஜயோகத்தில் முழு பலனைப் பெறுவீர்கள். ஆன்மிகப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். புனித யாத்திரை செல்வதற்கான யோகம் உண்டு. வேலை தொடர்பாக நீண்ட தூர பயணம் செல்ல வேண்டியது இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். உங்களின் கனவுகள் நனவாகும். புதிய வாகனம் வாங்கும் வாங்கி மகிழ்வீர்கள்.

சிம்ம ராசியை சேர்ந்தவர்களுக்கு அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிரன் உச்சத்தால் வாழ்க்கையில் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். எதிர் பாலினத்தவரின் ஆதரவு கிடைக்கும். தொழில் ரீதியாக முன்னேற்றம் உண்டாகும். வங்கித் துறை, நிதி தொடர்பான துறையில் முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் உயர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் செயலுக்கான வெற்றி கிடைக்கும். புதிய சொத்து வாங்கி மகிழ்வீர்கள். உங்களின் சோம்பல் அதிகரிக்கும் என்பதால் அதை கட்டுப்படுத்த முயற்சிக்கவும். மாமியார் மற்றும் மருமகள் உறவு மேம்படும்.

தனுசு ராசியை சேர்ந்தவர்களுக்கு சுக ஸ்தானத்தில், சுகத்தை அருளும் சுக்கிரன் உச்சம் அடைய உள்ளார். இதனால் சமூகத்தில் உங்கள் புகழ் அதிகரிக்கும். மாளவ்ய ராஜயோகத்தால் வண்டி, வாகன சேர்க்கை, செயல்களில் அதிர்ஷ்டம் உண்டாகும். ரியல் எஸ்டெட், வீடு, மனை வாங்குதல், விற்பது தொடர்பான சாதக பலன்கள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

Trending News

Latest News

You May Like