ஜூலை மாதம் இந்த 3 ராசிக்காரர்கள் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது..!

குரு மிதுன ராசியில் அஸ்தமன நிலையில் இருக்கிறார், பின்னர் ஜூலை 09, 2025 அன்று மீண்டும் மிதுன ராசியில் உதயமாகிறார். குருபகவானின் இந்த இயக்கம் சில ராசிக்காரர்களுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது.
கன்னி
ஜூலை மாதத்தில் நடக்கும் குருவின் அஸ்தமனத்தால், கன்னி ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். வேலையில் இருப்பவர்கள் தங்கள் மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடும். இந்த காலகட்டத்தில் செய்யப்படும் முதலீடுகளால் அவர்கள் நஷ்டத்தை சந்திக்க வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கையில் சில பிரச்சினைகளை எதிர்கொள்ள வாய்ப்புகள் உள்ளன. இந்த காலகட்டத்தில் பயணங்களைத் தவிர்க்கவும், ஏனெனில் அவை விபத்துக்கள் அல்லது இழப்புகளை ஏற்படுத்தும். வேலையில்லாதவர்கள் இந்த காலகட்டத்தில் சில பின்னடைவுகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
சிம்மம்
குருபகவானின் அஸ்தமனத்தால் சிம்ம ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். வேலையில் இருப்பவர்கள் தங்கள் நிலையை தக்க வைத்துக்கொள்ள கடினமாக உழைக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் அவர்களின் வீட்டில் கொந்தளிப்பான சூழல் நிலவலாம். பயணங்களுக்கு இந்த காலம் நல்லதாக கருதப்படவில்லை.
இழப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால், அவர்கள் புதிய முதலீடுகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. வீட்டிற்கு சில பொருட்களை வாங்குவதற்கு முன் இருமுறை யோசித்து தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும். ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் உணவு முறையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு குருவின் அஸ்தமனம் சாதகமான பலன்களை அளிக்கப் போவதில்லை. இழப்புகளைச் சந்திக்கும் வாய்ப்புகள் இருப்பதால் கவனமாக முதலீடு செய்வது நல்லதுமுடிவுகளை கவனமாக எடுக்க வேண்டியது நல்லது. அவர்களுக்கு வாழ்க்கைத்துணையுடன் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது, எனவே விருச்சிக ராசிக்காரர்கள் தங்கள் மனதை அமைதியாக வைத்திருக்க வேண்டும்.அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும் வேலைகளை சரியான நேரத்தில் முடிப்பது நல்லது, இல்லையெனில் அவர்கள் நற்பெயரை இழக்க நேரிடும். குடும்பத்திலும் பிரச்சனைகள் இருக்கலாம், எனவே குடும்ப உறுப்பினர்களுடன் பேசும்போது சரியான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.