1. Home
  2. தமிழ்நாடு

“இந்த 2 அமைச்சர்கள் சில தினங்களில் ஜெயிலில் இருப்பார்கள்” : காங்கிரஸ் எம்.பி. கணிப்பு!

“இந்த 2 அமைச்சர்கள் சில தினங்களில் ஜெயிலில் இருப்பார்கள்” : காங்கிரஸ் எம்.பி. கணிப்பு!


அதிமுக அமைச்சர்கள் இருவர் குறித்து விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கிசார் முறைகேடு குறித்து பேசிய அவர், ஏழை விவசாயிகளுக்கு செல்ல வேண்டிய பணத்தை சிலர் ஆளுங்கட்சியின் உதவியோடு திருடியுள்ளனர் என்றும் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

நீட் தேர்வு தொடர்வதால் தமிழகத்தில் தற்கொலையும் தொடர்கிறது என்று கூறியுள்ள மாணிக்கம் தாகூர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நீட் தேர்வை ஆதரித்து வருவது வருத்தத்திற்குரியது என கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி.உதயக்குமார் குறித்து மாணிக்க தாகூர் எம்.பி கடுமையாக விமர்சித்துள்ளார். அவர்கள் இருவரும் சிலகாலம் இருக்கக்கூடிய மாப்பிள்ளைகள், அதற்கு மேல் அவர்கள் மதுரை மத்திய சிறைச்சாலையிலோ அல்லது சென்னை சிறையிலோ தான் இருப்பார்கள் என கூறியுள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like