1. Home
  2. தமிழ்நாடு

அடுத்த 2 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் இடியுடன் மழை கொட்டூம்.. வானிலை மையம் எச்சரிக்கை !



தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் விவசாய பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். நீர் நிலைகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 2 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் இடியுடன் மழை கொட்டூம்.. வானிலை மையம் எச்சரிக்கை !

வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோயம்புத்தூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியிலும் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த 2 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் இடியுடன் மழை கொட்டூம்.. வானிலை மையம் எச்சரிக்கை !

வடகிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 20ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.

இன்று முதல் செப்டம்பர் 21ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா பகுதிகளிலும், இன்று அந்தமானிலும் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like