1. Home
  2. தமிழ்நாடு

இனி மிடில் கிளாஸ் வர்க்கமே இருக்காதாம்..! எச்சரித்த கூகுள் நிறுவன நிர்வாகி..!

1

செயற்கை நுண்ணறிவால் வரும் காலத்தில் மிடில் கிளாஸ் என்ற வர்க்கமே இருக்காது என்று கூகுள் நிறுவனத்தின் முன்னாள் உயர் அதிகாரி திடுக் தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனித சமூகத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என கூகுள் நிறுவனத்தின் முன்னாள் உயர் அதிகாரி மோ காவ்தத் எச்சரித்துள்ளார்.

ஏஐ காரணமாக வேலைகள் கணிசமாக குறையும் என்றும், இதனால் நடுத்தர வர்க்கம் என்ற ஒன்றே இல்லாமல் போகும் என்றும் அவர் கூறியுள்ளார். 2018 ஆம் ஆண்டு கூகுள் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரியாக இருந்த காவ்தத், இந்த திடுக் தகவலை கூறியுள்ளார். வரும் 2027 முதல் நிலைமை மோசமடையத் தொடங்கும் எனக் கணித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியால் சமூக அமைதியின்மை ஏற்படும் என்றும் மக்கள் வாழ்வாதாரத்தையும், வாழ்க்கையின் நோக்கத்தையும் இழப்பதால் மனநலப் பிரச்சினைகள் அதிகரித்து, தனிமை உணர்வும், சமூகப் பிளவுகளும் ஆழமடையும் என்றும் எச்சரித்து உள்ளார். "நீங்கள் டாப் 0.1% பணக்காரர்களுக்குள் இல்லையென்றால், நீங்கள் ஒரு ஏழை விவசாயியாகத்தான் இருக்க வேண்டும். நடுத்தர வர்க்கம் என்பதே இருக்காது.

ஒயிட் காலர் ஜாப்ஸ் எனப்படும் வெள்ளை காலர் வேலைகள், அதாவது மென்பொருள் உருவாக்குநர்கள், சிஇஓ-க்கள், பாட்காஸ்டர்கள் என யாரும் ஏஐ-யின் தாக்கத்திலிருந்து தப்ப முடியாது. அடுத்த 15 வருடங்கள் மனிதர்களுக்கு மிகவும் கடினமான மாற்ற காலமாக இருக்கப் போகின்றன என்று காவ்டாட் கணிக்கிறார். AI துறையில் ஏற்படும் முன்னேற்றம் காரணமாக, ஏராளமான வேலைகள் தானாகவே இயங்கக்கூடியதாக மாறிவிடும். அவர் சொந்தமாக நடத்தும் AI நிறுவனம், "மனோதத்துவ நுண்ணறிவை" கொண்ட செயற்கை நுண்ணறிவு மென்பொருள் ஒன்றை உருவாக்குகிறது. இந்த தொழில்நுட்பத்தை வளர்க்க, வெறும் 3 பேர் இருந்தால் போதுமானது என்கிறார். இதே வேலைக்கு சில வருடங்களுக்கு முன்பு 300 பேர் தேவைப்பட்டிருக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.இவ்வாறு பேசியுள்ளார் காவ்தத்.

உணர்ச்சி மற்றும் உறவுசார் AI-யை உருவாக்கும் இந்த நிறுவனத்தை மூன்று பேர் மட்டுமே நிர்வகிப்பதாக அவர் குறிப்பிட்டார். "முன்பு இந்த மாதிரி ஸ்டார்ட்அப்களுக்கு 350 டெவலப்பர்கள் தேவைப்பட்டிருப்பார்கள். பாட்காஸ்டர்கள் கூட ஏஐ-யால் மாற்றப்படுவார்கள் " என்று அவர் சுட்டிக்காட்டினார். இதற்கிடையே, 'ஏஐ-யின் காட்பாதர்' என்று அழைக்கப்படும் ஜெஃப்ரி ஹிண்டன், ஏஐ விரைவில் தனக்கென ஒரு மொழியை உருவாக்கிக்கொள்ளும் என்றும், இதனால் மனிதர்களால் இயந்திரங்களைக் கண்காணிக்க முடியாமல் போகும் என்றும் எச்சரித்துள்ளார்.

அதாவது, "இயந்திரங்கள் ஒன்றுடன் ஒன்று பேச தங்கள் சொந்த உள் மொழிகளை உருவாக்கினால் அது இன்னும் பயங்கரமானது. அவை சிந்திக்க தங்களுக்குள் ஒரு மொழியை உருவாக்கிக் கொண்டால் நான் ஆச்சரியப்பட மாட்டேன், அப்போது அவை என்ன நினைக்கின்றன என்பது நமக்குத் தெரியாது. AI ஏற்கனவே பயங்கரமான எண்ணங்களை உருவாக்கக்கூடிய திறனை வெளிப்படுத்தியுள்ளது. மனிதர்களால் கண்காணிக்க முடியாத வகையில் இயந்திரங்கள் சிந்திப்பது சாத்தியமே" என ஹிண்டன் தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like