இன்று சென்னை உட்பட 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை..!
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டது. மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம் போல் செயல்படும் என ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.