1. Home
  2. தமிழ்நாடு

நாளை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு விடுமுறை கிடையாது..!

1

தினந்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு வந்து செல்கின்றனர் 

பூங்காவிற்கு வழக்கமாக செவ்வாய்க்கிழமை விடுமுறை தினமாகும். இதற்கிடையில், தற்போது கோடை விடுமுறை தினம் என்பதால் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வண்டலூர் உயிரியல் பூங்கா பொதுமக்கள் பார்வைக்காக நாளை திறந்திருக்கும் என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.வழக்கமான நேரத்தில் பாா்வையாளா்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வண்டலூரில் பூங்காவில் 2000க்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. அதில் சிறுத்தை, வெள்ளை புலிகள், மனித குரங்குகள், வங்காளப் புலிகள், நீர்நாய், சிங்கங்கள் என அனைத்து வகையான விலங்குகளும் உள்ளன.

இந்த பூங்காவில் குழந்தைகள் பூங்கா, இரவு நேர விலங்குகள் பூங்கா, பாம்புகளின் இருப்பிடம், பூங்கா மீன் மற்றும் வண்ணத்துப்பூச்சி பூங்கா கண்காட்சியகம் போன்றவை தனித்தனியாக அமைந்துள்ளது. மேலும் விலங்குகள் கோடைகால வெயிலை சமாளிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. மேலும் பார்வையாளர்களை கவரும் வகையில் அனைத்துநடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like