1. Home
  2. தமிழ்நாடு

காவலர்களுக்கு அடுத்து 10 நாட்கள் விடுமுறை கிடையாது..!

1

ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. 1947 ஆகஸ்ட் 15ல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து தனி விடுதலை நாடானதை குறிக்கும் இந்த நாள் அரசு விடுமுறையாக கொண்டாப்படுகிறது. இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படுவது வழக்கம்.

ஒவ்வொரு மாநிலத் தலைநகரத்திலும் மாநில முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதுடன் நலத்திட்ட உதவிகளையும் வழங்குவர். இதுபோல் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர்களும், அரசு அலுவலகங்களில் அதன் உயரதிகாரிகளும், பள்ளி, கல்லூரிகளில் தலைமை ஆசிரியர்/முதல்வர் அல்லது சிறப்பு விருந்தினராக அழைக்கப் பெற்றவர்கள் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றுவர்.

இதனையடுத்து  வருக்கிற ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று நாட்டின் சுதந்திர தின விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது.   இதில்  எந்த ஒரு அசம்பாவிதமும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக நாடு முழுவதும்  பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.. அனைத்து பாதுகாப்பு படையினரும்  பாத்துகப்பு   பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனையொட்டி அனைத்து  பிரிவுகளிலும்  பணிபுரியும் காவல்துறையினருக்கு அவசியம் விடுமுறை தேவை என்றால் மட்டுமே விடுப்பு அளிக்கபடும் என்றும் அவசியம் இன்றி  விடுப்பு எடுக்கும் காவலர்களுக்கு அடுத்து வரும் 10 நாட்களுக்கு விடுமுறை எடுக்க கூடாது என்று  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like