1. Home
  2. தமிழ்நாடு

சோறு உண்டு.. ஓட்டு கிடையாது... அதிர்ச்சியில் பாஜக..!

1

 2026 சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ’’மக்களை காப்போம்.. தமிழகத்தை மீட்போம்..’’ என்ற பெயரில் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து பேசி வருகிறார் . இதற்காக முதல் கட்டமாக கடந்த 7ம் தேதி தனது சுற்றுப்பயணத்தை ஆரம்பித்தார். இதனைத்தொடர்ந்து இரண்டாவது கட்டமாக ஜூலை 23ஆம் தேதி விழுப்புரம், கடலூர், நாகை மாவட்டம் ,மயிலாடுதுறை கோவில், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 33 சட்டமன்ற தொகுதிகளுக்கு எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

மறுபுறம் அதிமுக கூட்டணியில் அமைத்து உள்ள பாஜக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ளதால் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. மேலும் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து பிறகு முக்கிய உள்துறை அமைச்சர் தமிழ்நாட்டிற்கு இரண்டு முறை வந்து சென்றுள்ளார். மேலும் முதல் முறையாக பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரன் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் நந்திமரத் தெருவில் பாஜக பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர். அப்போது சட்டமன்ற தேர்தலுக்காக இதுவரை அமைக்கப்பட்டுள்ள பூத் கமிட்டி உறுப்பினர்களின் விவரத்தை நிர்வாகிகளிடம் கேட்டு அறிந்தார். அப்போது பூத் கமிட்டி கூட்டத்திற்கு வந்த பாஜக நிர்வாகி ஒருவர் சோறு கூட போடவும் ஆனால் ஓட்டு போட மாட்டோம் என்று பொது மக்கள் கூறியதாக நயினார் நாகேந்திரனிடம் கூட்டத்தில் வெளிப்படையாக தெரிவித்தார். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.


 

Trending News

Latest News

You May Like