1,06,250 சம்பளம் வாங்குவோருக்கு எந்த வரியும் இல்லை.. ஆனால் அதைவிட 1000 ரூபாய் கூடுதலாக வாங்கினால்..

மத்திய பட்ஜெட்டில் ஆண்டுக்கு 12 லட்சம் சம்பளம் வாங்குவோர் மற்றும் 12 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் வருமான வரியாக ஒரு ரூபாய் கூட கட்ட வேண்டியது இல்லை.. அதேநேரம் 12 லட்சத்துடன் நிலையான வரிக்கழிவு 75 ஆயிரம் வரும் என்பதால் 12 லட்சத்து 75 ஆயிரம் வரை வருமானவரியில்லை ஆனால், அதன்பிறகு வெறும் ஆயிரம் கூடுதலாக வாங்கினாலே 71,400 ரூபாய் வரி கட்ட வேண்டியதிருக்கும். ஏனெனில் 11,76 லட்சம் சம்பளம் வாங்குவோருக்கு வரி விதிப்பிற்குள் வருகிறார்கள்.
12லட்சத்து 75ஆயிரத்தை தாண்டி ஆயிரம் ரூபாய் கூடுதலாக வாங்கினாலே வரியாக கிட்டத்தட்ட 50 முதல் 70 ஆயிரம் வரிகட்ட வேண்டிய நிலைக்கு வருவார்கள். வெறும் 25 ஆயிரம் கூடுதாலாக சம்பளம் வாங்குவோர் 75 ஆயிரம் வரி கட்ட வேண்டியதிருக்கும். ஏனெனில் புதிய வருமான வரி விதிப்பு முறையை பொறுத்தவரை 4லட்சத்தை தாண்டினாலே வரி கட்ட வேண்டும். அதன்படி அதன்படி 4 லட்சம் வரை வருமான வரி கிடையாது.. ஆனால் 4 முதல் 8 லட்சம் வரை உள்ள வருமானத்திற்கு 5 சதவீதம் வருமான வரி இருக்கும்.. அத்துடன் அடுத்த 8 லட்சம் முதல் 12 லட்சம் வரை உள்ள வருமானத்திற்கு 10 சதவீதம் வருமான வரி இருக்கும். அதேநேரம் 13 வது லட்சத்திற்கு அதாவது 12 லட்சத்தை தாண்டி உள்ள ஒரு லட்சத்திற்கு 15 சதவீத வரி இருக்கும். ஒட்டுமொத்தமாக 13 லட்சம் சம்பளம் வாங்குவோருக்கு வரி என்று பார்த்தால் 75 ஆயிரம் வரி கட்ட வேண்டிய நிலை உள்ளது.
மாதச்சம்பளப்படி பார்த்தால் 1,06,250 சம்பளம் வாங்குவோருக்கு எந்த வரியும் இல்லை.. ஆனால் அதைவிட வெறும் 1000 ரூபாய் கூடுதலாக சம்பளம் வாங்கினாலே வரியில் சிக்கி கொள்வார்கள். 1,08,333 ரூபாய் சம்பளம் வாங்குவோர் வருமான வரி கட்ட வேண்டியதிருக்கும்.